நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலியாகும் கூடாரம்.. சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு.. கைவிடப்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அவரின் குடியரசு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு கிளம்ப தொடங்கி உள்ளது. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை குடியரசு கட்சி தலைவர்களே மதிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது. 270 எலக்ட்ரல் வாக்குகளை வென்றால் வெற்றி என்ற நிலையில்.. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளை பெற்று வெற்றியின் விளிம்பில் இருக்கிறார்.

இன்னொரு பக்கம் குடியரசு கட்சி வேட்பளார் டிரம்ப் 214 வாக்குகளுடன் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்: ஜோ பிடன் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்: ஜோ பிடன்

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

நான் தேர்தலில் வென்றுவிட்டேன். தபால் வாக்கில் முறைகேடு நடக்கிறது. தபால் வாக்குகளை ஜனநாயக கட்சியினர் முறையின்றி பதிவு செய்து எண்ணி வருகிறார்கள். இதனால் பென்சில்வேனியா, ஜார்ஜியா, நெவாடா, நார்த் கரோலினா, அரிசோனா, அலாஸ்கா மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும், நான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப் கோரிக்கை

டிரம்ப் கோரிக்கை

அதோடு இதற்காக பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன் மாகாணங்களில் டிரம்ப் வழக்கும் தொடுத்துள்ளார். ஆனால் ஜார்ஜியா, மிச்சிகன் மாகாணங்களில் டிரம்ப் தொடர்ந்த வழக்கில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இந்த நிலையில் சொந்த கட்சிக்கு உள்ளேயே டிரம்பிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கையை.. சொந்த கட்சிக்கு உள்ளேயே யாரும் மதிக்கவில்லை.

சொந்த கட்சி

சொந்த கட்சி

ஆம் குடியரசு கட்சியை சேர்ந்த பெரும்பாலான செனட்டர்கள் டிரம்பிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களும், டிரம்பின் நீண்ட கால நண்பர்களும் கூட அவருக்கு தெரிவித்துள்ளனர். புளோரிடாவை சேர்ந்த ஜனநாயக கட்சி செனட்டர் மார்கோ ரூபியோ, ஒரு மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கிறது என்றால், அந்த வேட்பாளர் வழக்கு தொடுக்கலாம், உண்மையான கோரிக்கை என்றால் வழக்கு தொடுக்கலாம்.

தபால் வாக்கு

தபால் வாக்கு

தபால் வாக்குகளை எண்ணுவதில் தவறு எதுவும் இல்லை. அது முறையாக பதிவு செய்யப்பட்ட வாக்கு. இந்த வாக்குகளை எண்ணி முடிப்பதற்கு காலக்கெடு விதிக்க கூடாது, என்றுள்ளார். டிரம்பின் நெருங்கிய நண்பர், முன்னாள் அரிசோனா செனட்டர் ஜெப் பிளேக்.. அதிபர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஜனநாயக கட்சி உறுப்பினரும் டிரம்ப் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்றுள்ளார்.

கவர்னர்

கவர்னர்

அதேபோல் குடியரசு கட்சியை சேர்ந்த மேரிலாண்ட் மாகாண கவர்னர் லாரி லோகன் டிரம்ப்பை எதிர்த்துள்ளார். அடுத்த 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக இவர் நிற்க வாய்ப்புள்ளது.. இவரும் கூட டிரம்ப் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்றுள்ளார். அவர் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் அமெரிக்க ஜனநாயகத்தை கேலி செய்ய பார்க்கிறார். தபால் வாக்குகளை எண்ணுவதை தடுக்க கூடாது.. தோல்வி வந்தால் அதை டிரம்ப் ஏற்க வேண்டும், என்று லாரி லோகன் கூறியுள்ளார்.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் உட்டா மாகாண குடியரசு கட்சி செனட்டர் மீட்பி ரோம்னி, பொதுவாக வாக்குகளை எண்ணுவது நேரம் எடுக்க கூடிய செயல்.. இதற்காக பாதியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த சொல்லிவிட்டு.. வென்றுவிட்டேன் என்று கூற கூடாது. சட்டத்தை மதியுங்கள், என்று கூறியுள்ளார். அதேபோல் குடியரசு கட்சியின் செனட்டர்கள் மிட்ச் மெக்கனால், லிசா முர்க்கோவ்சி, ஆடம் கின்சிங்கர் எல்லோரும் டிரம்பை எதிர்த்துள்ளனர்.

கைவிடப்பட்டார்

கைவிடப்பட்டார்

ஏற்கனவே சட்ட ரீதியான போராட்டத்தில் டிரம்ப் சரிவை சந்தித்துவிட்டார். இந்த நிலையில் தற்போது சொந்த கட்சிக்கு உள்ளேயே அவர் எதிர்ப்பை சந்தித்து வருகிறார். ஆட்சிக்கு எதிராக, தேர்தலுக்கு எதிராக இவர் கலகம் செய்யும் வாய்ப்புகள் இதனால் குறைந்து வருகிறது.. சொந்த கட்சியிலேயே இவர் பக்கம் யாரும் நிற்காத காரணத்தால், இவரால் பெரிய அளவில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
US Presidential Election 2020: Even Republicans also don't want to fall in line with Trumps fraud claim postal votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X