நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த அதிபர்.. இரவோடு இரவாக பிடனை வெற்றியாளராக அறிவித்த DDHQ அமைப்பு.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்யும் அமைப்பான டிடிஎச்க்யூ (DDHQ) அமைப்பு, ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடனை அதிபர் தேர்தலின் வெற்றியாளர் என்று அறிவித்துள்ளது.இதற்கான காரணத்தையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடைசிகட்ட வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.. இன்னும் சில லட்சம் வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில், கடுமையான போட்டி நிலவுவதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் நிறைய தபால் வாக்குகள் இருப்பதால் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

அதிபர் பதவிக்கு பிடன் உரிமை கோரினால்.. நானும் உரிமை கோருவேன்.. டிரம்ப் பரபரப்பு டிவிட்.. மோதல்! அதிபர் பதவிக்கு பிடன் உரிமை கோரினால்.. நானும் உரிமை கோருவேன்.. டிரம்ப் பரபரப்பு டிவிட்.. மோதல்!

வெற்றி

வெற்றி

இந்த நிலையில் நேற்று இரவே பிடன் வெற்றிபெற்றுவிட்டார் என்று டிடிஎச்க்யூ (DDHQ) அமைப்புதெரிவித்தது. டிடிஎச்க்யூ (DDHQ) அமைப்பு என்பது Decision desk என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த தேர்தல் ஆய்வு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் முக்கியமான செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் ஆலோசகர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

தேர்தல் நேரத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் இந்த அமைப்பு முடிவுகளை துல்லியமாக அறிவிக்க கூடிய அமைப்பாகும். 2010ல் இருந்து பல்வேறு தேர்தலில் இந்த அமைப்பு முடிவுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் பிடன் வென்றுவிட்டார் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது. பென்சில்வேனியாவில் பிடன் பெற்ற முன்னிலையை வைத்து அந்த அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன சொன்னது

என்ன சொன்னது

இதற்கு டிடிஎச்க்யூ (DDHQ) அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், பிடன் வெற்றி இன்னும் அதிகாரபூர்வமாக மற்ற நிறுவனங்களால் அறிவிக்கப்படவில்லை. இன்னும் வாக்குகள் மீதம் உள்ளது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் கணக்குப்படி பிடன் வென்றுவிட்டார். புள்ளிவிவரங்கள்,ஆய்வுகள் படியே இதே தெரிவித்துள்ளோம். பென்சில்வேனியாவில் இனி டிரம்ப் பிடனை முந்த முடியாது.

வாக்குகள் எப்படி

வாக்குகள் எப்படி

கடைசியாக எண்ணப்பட்ட 30%க்கும் அதிகமான வாக்குகள் இங்கு பிடனுக்கு சாதகமாக மாறியுள்ளது. அதேபோல் பென்சில்வேனியாவில் டிரம்ப் செல்வாக்கு பெற்ற கவுண்டிகளில் கூட பிடன்தான் முன்னிலை வகிக்கிறார்.இதுதான் நிலவரம். இனியும் மீதம் இருக்கும் 1% தபால் வாக்குகள் அப்படித்தான் வரும்.மீதம் உள்ள வாக்குகளும் இப்படித்தான் இருக்கும்.

 மாற்றம் வராது

மாற்றம் வராது

இனி மீதம் வர போகும் வாக்குகளில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் பிடனின் பென்சில்வேனியா வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் அதிபர் தேர்தலிலும் அவரின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆகவேதான் பிடனின் வெற்றி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம், என்று அந்த அமைப்புதெரிவித்துள்ளது.

English summary
US Presidential Election 2020: Why DDHQ calls the election and announces Biden as the winner so soon?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X