இரவோடு இரவாக நடந்த திருப்பம்.. மொத்தமாக கலைந்து போன கனவு.. டிரம்ப்பின் கோபத்திற்கு இதுதான் காரணம்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை வகித்த சில மாகாணங்களில் கடைசி கட்டத்தில் பிடன் அதிரடியாக வெற்றிபெற்றார். இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்ப் கடும் விரக்தியில் இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக 160 மில்லியன் மக்கள் வாக்கு அளித்துள்ளனர். 101 மில்லியன் மக்கள் அதில் தபால் வாக்கு அளித்துள்ளனர்.
இந்த தேர்தலில் தொடக்கத்தில் டிரம்ப் முன்னிலை வகிப்பது போல இருந்தது. குடியரசு கட்சிக்கு ஆதரவான மாகாணங்களில் வென்ற டிரம்ப்.. ஜனநாயக கட்சிக்கு ஆதரவான தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வந்தார்.

எப்படி
அதிலும் டெக்சாஸ் மாகாணத்தில் 38, புளோரிடாவில் 29 இடங்களை மொத்தமாக டிரம்ப் அள்ளினார். பல இழுபறி மாகாணங்களில் டிரம்ப்தான் முன்னிலை வகித்தார்.இந்த நிலையில்தான் இரவோடு இரவாக டிரம்ப் முன்னிலை வகித்த இடங்களில் எல்லாம் பிடன் வென்று இருக்கிறார். டிரம்ப் தொடக்கத்தில் முன்னிலை வகித்த விஸ்கான்சிஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பிடன் வென்றுள்ளார்.

ஏன்
இந்த திடீர் திருப்பம் ஏற்படுவதற்கு காரணம்.. தபால் வாக்குகள். விஸ்கான்சிஸ் மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் முதலில் டிரம்ப்தான் முன்னிலை வகித்தார். ஆனால் போக போக தபால் வாக்குகளில் பிடன் முன்னிலை வகிக்க தொடங்கினார். அதிலும் விஸ்கான்சிஸ் மாகாணத்தில் வெறும் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிடன் வெற்றிபெற்றார்.

வெற்றி
இன்னொரு பக்கம் மிச்சிகன் தொகுதியில் 1 லட்சம் தபால் வாக்குகளால்.. பிடன் திடீரென வெற்றிபெற்றார். பிடன் தொடக்கத்தில் இங்கு 45 வாக்குகளில் பின்னடைவை சந்தித்து இருந்தார். ஆனால் கடைசியில் வந்த தபால் வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிவை இரவோடு இரவாக புரட்டி போட்டது. இதுதான் டிரம்ப் தற்போது கோபம் அடைய காரணம்.

பறிபோகிறது
இதைதான்.. என்னுடைய வாக்குகள், வெற்றி எல்லாமே காணாமல் போகிறது என்று டிரம்ப் கூறியுள்ளார். வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவதால் டிரம்ப் விரக்தியில் இருக்கிறார். தபால் வாக்குகள்தான் இந்த தேர்தலில் கேம் சேஞ்சராக உள்ளது. இதனால்தான் மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று டிரம்ப் கோரிக்கை வைத்து வருகிறார்.

கோரிக்கை
அதேபோல் இன்னொரு பக்கம் பென்சில்வேனியா, ஜார்ஜியா போன்ற மாகாணங்களில் இன்னும் முடிவு வரவில்லை. இங்கும் தபால் வாக்குகள்தான் அதிகம் பதிவாகி உள்ளது. இந்த தபால் வாக்குகள்தான் இனி முடிவை தீர்மானிக்கும்.

முடிவு
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர்தான் அதிகமாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த தபால் டிரம்பிற்கு எதிராக செல்ல வாய்ப்புள்ளது. இதனால் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. இதனால்தான் டிரம்ப்.. இந்த வாக்குகளை எண்ணகூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications