குலுங்கிய ஒயிட் ஹவுஸ்! அமெரிக்க அதிபர் பிடனுக்கு கொரோனா! தேர்தலில் இருந்து விலக முடிவு? செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார். அதிபர் தேர்தலில் இருந்து பிடன் விலக நெருக்கடி தரப்படும் நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்களின் சோதனைக்கு பின் பிடன் போட்டியில் இருந்து விலகுவது பற்றி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மறுதேர்தல் பிரச்சாரத்தை கைவிடுமாறு சக ஜனநாயகக் கட்சியினரே அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை. உங்களுக்கு வயதாகிவிட்டது. சரியாக உங்களால் பேச முடியவில்லை.. உங்கள் பேச்சில், செயலில் நிலைத்தன்மை இல்லை. அதனால் போட்டியில் இருந்து விலகுங்கள் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

us trump world

பிடன் கருத்து: இப்படிப்பட்ட நிலையில்தான் ஜோ பிடன் அளித்த நேர்காணலில், எனக்கு உடல்நலக்குறைவு உறுதி செய்யப்பட்டால் போட்டியில் இருந்து விலகுகிறேன். மருத்துவர்கள் என்னை சோதனை செய்யட்டும். ஒருவேளை எனக்கு உண்மையில் உடல்நிலை பிரச்சனை இருக்கிறது என்றால் நான் போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

டொனால்ட் டிரம்பிற்கு எதிரான போட்டியில் தொடருவதற்கான எனது முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறினார்.

எனக்கு ஏதேனும் மருத்துவ நிலை தோன்றியிருந்தால், யாராவது, மருத்துவர்கள் என்னிடம் வந்து, உங்களுக்கு இந்தப் பிரச்சனை வந்துவிட்டது, அந்த பிரச்சனை வந்துவிட்டது என்று சொன்னால்.. நான் முதல் ஆளாக போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று பிடன் பதிலளித்தார்

கொரோனா பாதிப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளார். அதிபர் தேர்தலில் இருந்து பிடன் விலக நெருக்கடி தரப்படும் நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்களின் சோதனைக்கு பின் பிடன் போட்டியில் இருந்து விலகுவது பற்றி முடிவெடுக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது. லேசான அறிகுறிகளை கொண்ட நிலையில் பிடன் தற்போது சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் அவரின் பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சொதப்பும் பிடன்: சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்திலும் பிடன் கடுமையாக சொதப்பினார். அவர் சொதப்பியதை பார்த்து அவரின் சொந்த ஜனநாயக கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலக சொல்லி உள்ளனர். ஜோ பிடன் செய்ய வேண்டியதெல்லாம், அவரது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை முறையாக நிகழ்த்துவதுதான். பெரிதாக வாதம் எல்லாம் செய்திருக்க வேண்டியது இல்லை.

மாறாக, அவர் தனது பேச்சு முழுக்க தடுமாறினார். திக்கி திணறினார். மேலும், தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான நேரத்தில், அவர் மேடையிலேயே பொம்மை போல நின்றது, பதறியது, பேச்சுக்கு இடையே இடையே அப்படியே அசையாமல் நின்றது என்று அதிர்ச்சி அளித்தார். பேச்சை விடுங்கள்.. அவருக்கு சுயநினைவு இருக்கிறதா என்ற கேள்வியை கூட இன்று நடந்த விவாதம் ஏற்படுத்தி உள்ளது.

மில்லியன் என்று சொல்ல வேண்டிய இடத்தில் பில்லியன், சாதாரண ஆங்கில வார்த்தைகளில் கூட தவறு, பல விஷயங்களில் அடிப்படையை கூட சொல்ல முடியாமல் திணறல் என்று பிடன் அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால் அவருக்கு நிதி கொடுத்தவர்களே போட்டியில் இருந்து விலகுங்கள் என்று பிடனிடம் சொல்ல தொடங்கி உள்ளார்களாம்.

முன்னாள் மேரிலாந்து கவர்னர் மார்ட்டின் ஓ'மல்லியின் பிடன் கட்சிதான். ஆனால் அவரே பிடனை விலக சொல்லி உள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிடன் பிரச்சாரத்திற்கு இணைத் தலைவராக இருந்த நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஜனநாயக ஆர்வலருமான ஜே சுர்டுகோவ்ஸ்கி, "பிடனை ட்ரம்ப் வறுத்து எடுத்துவிட்டார்- அவர் விலக வேண்டும்" என்று விமர்சனம் வைத்துள்ளார்.

இவரை தவிர நிகழ்வின் கட்சியின் பலர் இதே விமர்சனங்களை வைத்துள்ளனர். பிடனின் பேச்சின் முதல் நிமிடங்களைப் பார்த்த ஜனநாயகக் கட்சியினர் பெரும் குழப்பத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதுவரை முதல்கட்ட விவாதத்தில் பிடன் படுதோல்வி அடைந்துள்ளார். ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+