அமெரிக்காவின் கொடூரமான இரவு.. அடுத்தடுத்து 3 இடங்களில் துப்பாக்கி சூடு.. 4 பேர் பலி.. 18 பேர் காயம்!
நியூயார்க்: அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் ஒருசாரார் துப்பாக்கி எங்கள் கலாச்சாரம் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனால் அங்கு துப்பாக்கி பயன்பாட்டிற்கு எதிராக சரியான சட்டம் கொண்டு வர முடியாமல் அரசுகள் திணறி வருகிறது. இதனால் அங்கு துப்பாக்கி சூடு அடிக்கடி நடந்து வருகிறது.

எந்த பகுதி
அதில் ஒஹையோ மாகாணத்தில் இருக்கும் சின்சினாட்டி பகுதி அடிக்கடி துப்பாக்கி சூடு நடப்பதற்கு பெயர் போன இடமாகும். பொதுவாக அங்கு இரவு நேரத்தில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை சின்சினாட்டி பகுதியில் நடந்த சம்பவத்தை அந்த மாகாண போலீஸ் கொடூரமான இரவு என்று வர்ணித்து உள்ளது.

நேற்று இறைவாக்கு
திடீர் என்று அமெரிக்காவின் சின்சினாட்டி பகுதியில் வெவ்வேறு இடங்களில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் எந்த துப்பாக்கி சூட்டிற்கும் தொடர்பு இல்லை. குறைந்தது 20-30 கிமீ தூரத்தில் இந்த துப்பாக்கி சூடுகள் நடந்து இருக்கிறது.

வேறு நபர்கள்
வேறு வேறு நபர்கள் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

போலீஸ் விசாரணை
சுட்டுக்கொல்லப்பட்ட எல்லோரும் 40 வயதுக்கும் குறைவானவர்கள். இதில் 18க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரியை 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!











Click it and Unblock the Notifications