டஃப் பைட் கொடுத்த பிடன்.. வெற்றிக்கு மிக அருகில் டிரம்ப்! அமெரிக்க மிட் டேர்ம் முடிவு! நிலவரம் என்ன?
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற மிட் டேர்ம் தேர்தல் எனப்படும் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவில் இப்போதும் வாக்குசீட்டு முறைதான் கடைபிடிக்கப்படுகிறது. அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின் உடனடியாக உறுதி செய்வதற்காக மீண்டும் சில இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்.
இதனால் சில இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பொதுவாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நவம்பர் மாதம் மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெறும்.
அமெரிக்காவில் சுனாமி வரும்.. நம்பலைன்னா பாருங்க.. 2671வது ஆண்டிலிருந்து

என்ன தேர்தல்?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மொத்தம் இரண்டு அவைகள் உள்ளன. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் என்ற இரண்டு பலம் வாய்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் 435 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். இவர்களுக்குத்தான் இப்போது தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேபோல் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மொத்தம் 100 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இதில் பதவிக்காலம் முடிந்த 35 பேருக்கு தேர்தல் நடந்து உள்ளது.

முடிவு என்ன?
இதுவரை வெளியான முடிவுகளின் படி, செனட் சபை - 35 இடங்களில் 31 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 19ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 12 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 48 செனட்டர்கள், ஜனநாயக கட்சிக்கு 46 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு 51 பேர் தேவை என்பது. குறிப்பிடத்தக்கது

பிரதிநிதிகள் சபை முடிவுகள்
பிரதிநிதிகள் சபை - 435 இடங்களில் 391 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 207ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. குடியரசு கட்சி இதில் பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது. 184 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. இங்கு மெஜாரிட்டி பெற 218 இடங்களில் வெல்ல வேண்டும்.
கவர்னர் தேர்தல் - 36 கவர்னர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. அதில் 32 கவர்னர் பதவிகளுக்கான முடிவுகள் வந்துள்ளன. அதில் 16ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 16 கவர்னர் இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. . தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 24 கவர்னர் , ஜனநாயக கட்சிக்கு 22 பேர் உள்ளனர்.

வெற்றியா?
இந்த தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசு கட்சி வெல்லும் நிலையில் உள்ளது. அதாவது பிரதிநிதிகள் சபையை அந்த கட்சி கைப்பற்றும். செனட் சபையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் முழுமையாக இரண்டு அவைகளையும் கட்டுப்படுத்த போக போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசு கட்சி எளிதாக வெல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை மீறி பிடனின் ஜனநாயக கட்சி கடும் போட்டியை கொடுத்து இருக்கிறது.

நெருக்கடி
அமெரிக்காவில் பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பு இழப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் டிரம்பின் குடியரசு கட்சியை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களை எளிதாக வெல்ல விடாத அளவிற்கு ஜனநாயக கட்சி செயல்பட்டு உள்ளது. முக்கியமாக பென்சில்வேனியா, நியூ ஹாம்ஸ்பியர், மிச்சிகன், விஸ்கான்சினில் எல்லாம் ஜனநாயக கட்சி எதிர்பார்த்ததை சிறப்பாக செயல்பட்டு வென்றுள்ளது. டெக்சர்ஸ், ப்ளோரிடா, ஜார்ஜியாவை குடியரசு கட்சி கைப்பற்றி உள்ளது.

யாருக்கு வெற்றி?
இன்னும் நேவாடா, அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் செனட் சபை முடிவுகள் வரவில்லை. இங்கு கடுமையான க்ளோஸ் போட்டி நிலவி வருகிறது. இங்கு இன்னும் பல வாக்கு பெட்டிகள் எண்ணப்படாமல் உள்ளது. இங்கிருந்து வெளியாகும் முடிவுகள், தேர்தல் நிலவரத்தையே மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தேர்தல் அதிபர் பிடனுக்கு கொடுக்கப்படும் ரேங்க் கார்ட் போல நடக்கும் தேர்தல். அதிபரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு கொடுக்கப்படும் மார்க் போல இந்த தேர்தல் போல இந்த தேர்தல் பார்க்கப்படும். இதை வைத்தே அடுத்த அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவாரா என்பது தெரியும். அதேபோல் பிடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்பாரா என்பதும் இதை வைத்தே உறுதி செய்யப்படும். இதனால் இந்த தேர்தல் முடிவுகள் அதிகம் கவனம் பெறுகிறது.