இதுதான் ஒரே வழி.. இந்தியாவை "கைக்குள்" போட இறங்கி வரும் அமெரிக்கா.. ரஷ்யாவிற்கு எதிராக BIG பிளான்!
நியூயார்க்: ஐநாவில் நடந்த பல்வேறு கூட்டங்களில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் இந்தியாவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க முன்வரவில்லை. இதையடுத்து அமெரிக்கா இதில் புதிய திட்டங்களை போட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன!
Recommended Video
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு உலக நாடுகள், ஐரோப்பா எல்லாம் ஒன்று சேர்ந்து கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஏற்கனவே SWIFT எனப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை அமைப்பில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டு இருக்கிறது. ராணுவ ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதிக்கு கடுமையான தடை ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா இந்தியா
இந்த நிலையில் ராணுவ உபகாரணங்களுக்கு ரஷ்யாவை நம்பி இருக்கும் இந்தியா கடுமையான பாதிப்புகளை எதிர்க்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 65 சதவிகித ராணுவ இறக்குமதி ரஷ்யாவில் இருந்தே செய்யப்படுகிறது. விமானங்கள் தொடங்கி துப்பாக்கிகள் வரை ரஷ்யாவில் இருந்தே இந்தியா மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பொருளாதார தடைகள் இந்தியாவின் இறக்குமதியை வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

அறிக்கை
Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா தற்போது ரஷ்யாவுடன் மிக முக்கிய டீல்களை முடித்துள்ளது. அதன்படி சமீபத்தில் 4 தல்வார் போர் கப்பல்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டது. 20,000 AK-203 ரக துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் போட்டது. அதேபோல் ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் 6 லட்சம் AK-203 தயாரிக்கப்பட உள்ளது. மேலும் அகுலா என்ற நீர்மூழ்கி கப்பலை வாங்கவும் இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளது.

ஏற்றுமதி
அதோடு ரஷ்யா இந்தியா சேர்ந்து 375 பில்லியன் டாலருக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்த பொருளாதார தடையால் இந்தியாவின் இறக்குமதி மட்டுமின்றி ஏற்றுமதியும் வெகுவாக பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.இந்தியா இப்படி பெரிய அளவில் சிக்கல்களை சந்திக்க உள்ள நிலையில், இந்தியாவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் டொனால்ட் லியு இது தொடர்பாக செனட் கூட்டம் ஒன்றில் பேசி இருக்கிறார்.

இந்தியா அமெரிக்கா
டொனால்ட் லியு அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் இருந்து பெரிய ஆயுதங்களை வாங்க இனி உலக நாடுகள் கஷ்டப்படும். பொருளாதார தடை விதிகள் அப்படிப்பட்டது. இந்தியாவிற்கும் இது மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்தியா இதனால் கவலையில் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க நாம் நினைக்க வேண்டும்.

ஏற்றுமதி
ரஷ்யா விடப்போகும் மார்க்கெட்டை நாம் பிடிக்க வேண்டும். ரஷ்யா ஏற்றுமதி செய்த நாடுகளுக்கு நாம் பெரியது முதல் சிறியது வரையிலான அனைத்து ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று டொனால்ட் லியு கூறியுள்ளார். இந்தியாவிற்கு ரஷ்யாவை விட அதிக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று இவர் மறைமுகமாக கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. மேலும் டொனால்ட் லியு பேச்சில், உலகில் இரண்டாவது பெரிய பாதுகாப்பு இறக்குமதி நாடு இந்தியாதான்.

22 வருடம்
22 வருடமாக இந்தியா இந்த இடத்தில் வசித்து வருகிறது. இந்தியாவிற்கான அமெரிக்கா ஏற்றுமதி 20 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இதை உயர்த்த வேண்டும். ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் ராணுவ பொருட்கள் 53 சதவிகிதம் குறைந்துள்ளது. அதை மேலும் குறைத்து அமெரிக்க மார்க்கெட் பக்கம் இந்தியாவை கொண்டு வர வேண்டும் என்று டொனால்ட் லியு கூறி உள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா எஸ் 400 ஏவுகணை மறிப்பு சிஸ்டமை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் அமெரிக்கா இந்த கருத்தை தெரிவித்துள்ளது .

ஏன் இப்படி
ஐநா சபைகள் அனைத்திலும் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது. ரஷ்யாவின் ராணுவ ஏற்றுமதி காரணமாக இந்தியா ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மறுத்துவிட்டது என்று கூறப்படுகிறது. மேற்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் ரஷ்யாவை இந்தியா எதிர்க்கவில்லை. இந்த நிலையில்தான் ரஷ்யாவிற்கு பதிலாக இந்தியாவிற்கு அதிக அளவில் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து இந்தியா தங்கள் கேம்பிற்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications