இரும்பு போல காப்போம்.. இஸ்ரேலுக்காக களமிறங்கிய அமெரிக்கா.. ஈரானுக்கு பறந்த முக்கிய வார்னிங்.. போச்சு
நியூயார்க்: இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தர ஈரான் நினைக்க கூடாது. இரண்டு தரப்பும் மாறி மாறி தாக்கிவிட்டன. இந்த மோதல் முடிந்துவிட்டது. இனி ஈரான் தவறு செய்யக்கூடாது. இனி ஈரான் தாக்குதல் நடத்தினால் அது நிலைமையை மோசமாக்கும்.

அமெரிக்கப் படைகள் இஸ்ரேலை பாதுகாக்கும். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் தவறு செய்யக்கூடாது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டிடம் பேசிய பிறகு கூறினார். இஸ்ரேலுக்காக பாதுகாப்பாக உறுதுணையாக இருப்போம்.
ஈரான் இதில் இனி எந்த விதமான தாக்குதலையும் நடத்த கூடாது. இஸ்ரேலை நாங்கள் இரும்புக்கரம் கொண்டு பாதுகாப்போம்.. ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி தர நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
3 நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் ராணுவம் ட்விட் ஒன்று செய்துள்ளது. ஈரான் ராணுவம் சார்பாக செய்யப்பட்டுள்ள போஸ்டில், டிக் டாக்.. 3வது #TruePromise3 அட்டாக் என்று குறிப்பிட்டு உள்ளனர். முன்னதாக #TruePromise1 #TruePromise2 என்ற பெயரில் இஸ்ரேலில் ஒரே நாளில் ஈரான் இரண்டு கட்டமாக தாக்கியது. இதனால் 3வது கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.
3 நாட்களுக்கு முன் தான் ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் மூன்று அலை தாக்குதல்களில் நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications