அமெரிக்காவில் அத்துமீறி உள்ள இந்தியர்களை வெளியேற்ற.. டிரம்ப் கையில் எடுத்த.. 8 பெரிய அஸ்திரம்
நியூயார்க்: அமெரிக்காவில் அத்துமீறி தங்கி உள்ள இந்தியர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக என்றே சில எஸ்ஓபி பின்பற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா பின்பற்ற உள்ள எஸ்ஓபி: அதாவது பின்பற்றப்பட உள்ள செயல்பாட்டு வழிமுறை:

1. அமெரிக்கா முதலில் அங்கே தங்கி உள்ள விசா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும்.
2. படிப்பிற்கு விசா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கு எடுக்கும்.
3. சுற்றுலா விசா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும்.
4. எச் 1 பி விசா காலாவதி ஆனவர்களை கணக்கு எடுக்கும்.
5. இனி இவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
6. அதன்பின் இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கும். ஒன்று இந்திய விமானத்தில் அவர்களை நாட்டிற்கு அழைத்து செல்வது.
7. அல்லது அமெரிக்கா ராணுவ விமானத்தை உங்கள் நாட்டிற்குள் அனுமதியுங்கள் நாங்கள் வந்து விட்டுவிடுகிறோம் என்று கூறுவது.
8. இரண்டையும் இந்தியா ஏற்காத பட்சத்தில் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது. இதுவே டொனால்ட் டிரம்பின் திட்டம் என்கிறார்கள்.
கணக்கெடுப்பு தொடக்கம்:
அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவின் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானங்கள் அத்துமீறி குடியேறியவர்களின் சொந்த நாட்டிற்கே கொண்டு சென்று விடும். இந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு அந்தந்த நாடுகள் அனுமதி தர வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை. அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பலரை இந்தியா நாடு கடத்த திட்டமிட்டு உள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.
ஆனால் அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற்றப்பட உள்ளனர். அத்துமீறி குடியேறியவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.. இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
அச்சம்:
அமெரிக்காவில் படிப்பதற்காக சென்ற இந்தியர்கள் பலர் பாக்கெட் மணிக்காக பார்ட் டைம் வேலைகளை பார்க்கின்றனர். இந்த நிலையில்தான் இந்தியர்கள் பலரும் பார்ட் டைம் வேலைகளை விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்படி இவர்கள் பார்ட் டைம் வேலை பார்க்க கூடாது.
டிரம்ப் வருகையால் இது போன்ற தவறுகளை செய்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் பலர் பார்ட் டைம் வேலையை விட தொடங்கி உள்ளனர்.
எச்-1பி விசா பற்றி எனது எண்ணத்தை நான் மாற்றவில்லை. எப்பொழுதும் மிகவும் திறமையான நபர்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. நம் நாட்டில் புத்திசாலிகள் தேவை. முன் எப்போதும் இல்லாத வகையில் அவர்களுக்கு என்னுடைய ஆட்சியில் வேலை கிடைக்கும், என்று கூறி உள்ளார். இது இந்தியர்களுக்கு ஆதரவாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் விசாவில் "திறமையான" இந்தியர்களுக்கு ஆதரவான சில விதிகளை கொண்டு வருவார். ஆனால் மற்ற விசாவிற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications