"பேரழிவு வெடிப்பு".. கடலில் டைட்டானிக் நீர் மூழ்கிக்கு என்ன நடந்தது? அது என்ன Catastrophic Implosion
நியூயார்க்: டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி வெடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்திற்கு Catastrophic Implosionதான் காரணம் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
கடலுக்குள் அடியில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளேது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.
இந்த டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate. இவர்களின் டைட்டன் நீர் மூழ்கி கப்பல்தான் தற்போது காணாமல் போய் உள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர். ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் உள்ளனர்.

காணவில்லை: கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் இருந்து இந்த நீர் மூழ்கியை மீட்க மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
மேலே இருக்கும் கமாண்ட் கப்பலுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இது காணாமல் போய் உள்ளது. ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வரவும் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை.
ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இதை அப்படியே கீழே போட்டுவிடுவார்கள். அது கடலுக்கு அடியில் மூழ்கி செல்லும். அதில் ஒரு கண்ட்ரோலர் மட்டும் இருக்கும். ஜாய் ஸ்டிக் போன்ற இந்த கண்ட்ரோலரை இயக்க வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கப்பல் காணாமல் போன நிலையில் நேற்று இரவு தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.
தேடுதல் வேட்டை: இந்த நிலையில் இந்த தேடுதல் பயணத்தை இன்று அதிகாலை முடிப்பதாக அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. பயணிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் நீர்மூழ்கியின் பாகங்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.
நீர்மூழ்கி கப்பலின் மேல், கீழ், பின் பக்க பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை நிறைவு பெற்றதாகவும், நீர்மூழ்கி கடலில் மூழ்கி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு அதில் பயணம் செய்த 5 பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கப்பலின் பாகங்களை காட்டி அமெரிக்க கடற்படை இந்த விபத்து குறித்து உறுதியாக அறிவித்தது. டைட்டானிக் கப்பலின் அருகிலேயே 1600 அடி ஆழத்தில் இந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விபத்திற்கு Catastrophic Implosionதான் காரணம் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. அதாவது பேரழிவை ஏற்படுத்தும் உள்வெடிப்பு.
1600 அடி ஆழத்தில் கடலின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். அங்கே கட்டுப்பாடு இல்லாத ஒரு பொருள் போகும் போது வேகமாக அழுத்தத்துடன் தண்ணீர் உள்ளே செல்லும். இதனால் ஒரு நொடியில் நீர் மூழ்கி வெடித்து இருக்கும். இதுவே Catastrophic Implosion என்கிறார்கள். ஒரு நொடியில் உள்ளே தண்ணீர் வேகமாக சென்று அந்த நீர் மூழ்கி அழிந்து இருக்கும்.,
டைட்டனின் சுவர் பகுதிகள் அதாவது பிரஷர் ஹல் பகுதிகள் டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர்களின் கூட்டுப் பொருளின் கலவையால் ஆனது. இது சோதனை முயற்சி அடிப்படையிலான பொருள். இது மிக மிக புதியது. இது கிட்டத்தட்ட எலாஸ்டிக் போன்ற குணத்தை கொண்டது. ஒரு கட்டத்திற்கு மேல் பிரஷர் தாங்க முடியாமல் இது விரிந்து இருக்கும். அதனால் உள்ளே தண்ணீர் சென்று அதன்பின் நீர் மூழ்கி வெடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டைட்டானியம் மற்றும் கார்பன் ஃபைபர்களின் கலவையாக இதன் பாகங்களை உருவாக்கியதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.,
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications