இதுதான் சந்தேகமா இருக்கு.. டைட்டானிக்கிற்கு அருகில்.. 500 மீ தூரத்தில் நடந்த சம்பவம்.. குழப்புதே!
நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்த நிலையில் முக்கியமான ஒரு விஷயம் மட்டும் மக்களை குழப்பியபடியே இருக்கிறது.
டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த எல்லோரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டைட்டானிக் கப்பல்ல அருகே இந்த நீர்மூழ்கி கப்பல் வெடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கி வெடிப்பு எப்போது, எங்கு நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஆனால் நீர்மூழ்கி கப்பலின் முன் பகுதி, மின் பகுதி, கீழ் பகுதியின் சில பாகங்கள் மட்டும் டைட்டானிக் கப்பலுக்கு அருகே கிடைத்துள்ளது. பாகங்கள் கிடைத்து இருந்தாலும் எங்கு உண்மையில் வெடிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. டைட்டானிக் கப்பலில் இருந்து 500 மீட்டருக்கும் குறைவான தொலைவில், கடலின் அடிவாரத்தில் இந்த நீர் மூழ்கியின் முக்கிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் அர்த்தம் அந்த நீர்மூழ்கி டைட்டானிக் கப்பலுக்கு அருகே வரை சென்றுள்ளது. ஆனால் அந்த சமயம் பார்த்து நீர்மூழ்கி வெடித்துள்ளது. இது போக ஞாயிற்றுக்கிழமை டைட்டன் நீர் மூழ்கி கப்பல் தொடர்பை இழந்த சிறிது நேரத்திலேயே "வெடிப்பு" போன்ற சத்தம் கடலுக்கு அடியில் கேட்டு உள்ளது.
இதை அமெரிக்க கடற்படை கண்டறிந்துள்ளது. இது அங்கே தேடுதல் வேட்டை நடத்திய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஒரு உறுதியான சத்தம் இல்லை என்றாலும் கூட இது அங்கே தேடுதல் வேட்டை நடத்திய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த சத்தம் எதனால் ஏற்பட்டது என்பது இன்னமும் சந்தேகமாக உள்ளது.
1. நீர்மூழ்கி வெடித்த போது இந்த சத்தம் வந்ததா?
2. அருகே வேறு கப்பல்கள் சென்றதால் வந்த சத்தமா இது?
3. அங்கே வேறு ஏதாவது சம்பவம் நடந்ததா?
4. மேலே சோனார் கருவிகள் இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு கீழே இருந்து பயணிகள் நீர்மூழ்கியில் அடித்து அடித்து சத்தம் எழுப்பினார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த தேடுதல் பயணத்தை இன்று அதிகாலை முடிப்பதாக அமெரிக்க ராணுவமா அறிவித்து உள்ளது. பயணிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் நீர்மூழ்கியின் பாகங்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.
நீர்மூழ்கி கப்பலின் மேல், கீழ், பின் பக்க பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை நிறைவு பெற்றதாகவும், நீர்மூழ்கி கடலில் மூழ்கி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு அதில் பயணம் செய்த 5 பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கப்பலின் பாகங்களை காட்டி அமெரிக்க கடற்படை இந்த விபத்து குறித்து உறுதியாக அறிவித்தது. டைட்டானிக் கப்பலின் அருகிலேயே 4000 மீட்டர் ஆழத்தில் இந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விபத்திற்கு Catastrophic Implosionதான் காரணம் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. அதாவது பேரழிவை ஏற்படுத்தும் உள்வெடிப்பு.
கப்பல் உள்ளே அதிக அழுத்தத்துடன் நீர் சென்று வெடித்துள்ளது. இந்த வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சத்தத்தை சோனார் கருவிகள் உள்வாங்கி இருக்கலாம். கடைசி நொடியில் ஏற்பட்ட வெடிப்பின் அலறல் இந்த விபத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
4000 மீட்டர் ஆழத்தில் கடலின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். அங்கே கட்டுப்பாடு இல்லாத ஒரு பொருள் போகும் போது வேகமாக அழுத்தத்துடன் தண்ணீர் உள்ளே செல்லும். இதனால் ஒரு நொடியில் நீர் மூழ்கி வெடித்து இருக்கும். இதுவே Catastrophic Implosion என்கிறார்கள். ஒரு நொடியில் உள்ளே தண்ணீர் வேகமாக சென்று அந்த நீர் மூழ்கி அழிந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications