Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்லீவ்லெஸ்" ஜாக்கெட்.. நித்யானந்தா கைலாசாவிலிருந்து பறந்து வந்த "இளம் பெண்".. விஜயப்ரியா யாருங்க?

கைலாசா நாட்டு பிரதிநிதியாக ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள விஜயப்ரியா யார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கைலாசா நாட்டில் இருந்து ஐநாவில் பங்கேற்றுள்ளார் நித்யானந்தாவின் சிஷ்யை.. அவர் பெயர் விஜயப்ரியா? யார் இவர்? என்ன நடந்தது? இதுகுறித்த செய்திகள்தான் இணையத்தில் பரபரப்பாக வெளியாகி வருகின்றன

இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் -- தொழில்நுட்பம் பெருகி வரும் காலகட்டத்தில் -- உலகின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் யாரிடமும் எளிதாக அணுகலாம் என்ற சூழலில் -- உலகமே கைக்குள் அறிவியலாய் அடங்கிவிட்ட நிலையில் -- இன்னும் நித்யானந்தாவை மட்டும் கைது செய்ய முடியாத அதிசயம் நம் நாட்டில் மட்டுமே நடந்து வருகிறது.

இவர் மீது ஏகப்பட்ட கேஸ்கள் பதிவாகி இருந்தும், கைலாசா என்ற ஒரு தீவில் இந்த சுவாமி வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.. அவரை தேடி கைது செய்வதற்குள், கைலாசாவை தனி நாடாகவே அறிவித்துவிட்டார்..

டீ கடை கைலாசா

ஆனால், இன்னைக்கு வரைக்கும் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.. உலக மேப்பில் இன்னும் நம் போலீசார் தேடி கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கைலாசாவில் இருந்து வீடியோ, ஆடியோ, போட்டோக்கள், உட்பட சுடசுட செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. லைவ் டெலிகாஸ்ட்களும் நடக்கின்றன.. இந்த கைலாசா என்பது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள்.. அந்த நாட்டுக்கு செல்வதற்கு நம்ம ஊரில் இருந்து நிறைய பேர் அப்ளிகேஷன்கூட போட்டார்கள்.. கைலாசாவில் டீ கடை வைக்க போகிறேன், கைலாசாவில் விவசாயம் செய்ய போகிறேன் என்று கூறி லெட்டர்களும் தமிழகத்தில் இருந்து பறந்தன.

 ஓபன் டாக்

ஓபன் டாக்

இப்படிப்பட்ட சூழலில்தான், கைலாசா நாட்டின் சார்பில் ஐநா சபையில் ஒரு சிஷ்யை பங்கேற்றுள்ளார்.. அவர் பெயர் விஜயப்ரியா நித்யானந்தா என்பதாகும்.. கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்த ஐநா கூட்டத்தில், 19-வது ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கைலாசா நாட்டின் சார்பில் விஜயப்ரியா கலந்து கொண்டார். நிலையான வளர்ச்சி குறித்து நடந்த மாநாட்டிலும் அவர் பேசினார்.. இந்து மதத்தில் நிலையான வளர்ச்சி குறித்துப் பேசப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களை அடுக்கினார். இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாட்டை நித்தியானந்தா உருவாக்கியுள்ளதாகவும் அவர் அப்போது ஓபனாகவே சொன்னார்.

 உச்ச தேசபக்தர்

உச்ச தேசபக்தர்

மைக்கை பிடித்து பேச ஆரம்பித்த முதல் முடியும்வரை, கைலாசா நாட்டின் பெருமைகளையே பேசி கொண்டிருந்தார்.. நடுநடுவே, நித்தியானந்தா தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இந்து மதத்தின் உச்ச தேசபக்தருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.. இந்த போட்டோக்கள் எல்லாம் நித்தியானந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளன.. ஐநாவில் 'முடிவெடுக்கும் விஷயங்களில் பெண்களுக்கு சம உரிமை'என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றதாகவும் அதில் கைலசா பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும் அந்த ட்வீட்டில் பதிவிடப்பட்டு இருந்தது.

 மாயலோகம்

மாயலோகம்

இதையெல்லாம் பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்? அப்படியானால் கைலாசா என்று நிஜமாகவே ஒன்று இருக்கிறதா? ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை அமைப்பானது, தங்கள் கூட்டத்தில் எந்த ஒரு அமைப்பை சேர்ந்தவர்களையும் பேச அனுமதி கொடுக்கிறதா? இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய நித்தி கும்பல் கைலாசாவை ஐநா அங்கீகரித்தது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் வெடித்து கிளம்பின..

 ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்

ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்

இதையடுத்து, யார் இந்த விஜயப்ரியா ஆர்வம் பலருக்கும் தொற்றிக் கொண்டது.. அமெரிக்கா வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லையாம். ஆனால், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தாவின் போட்டோவை போட்டு, 'என் அன்புக்குரிய நித்யானந்த பரமசிவத்திற்கு' என்ற தலைப்பில் அவரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார் விஜயப்ரியா.. நித்யானந்தா வழக்கம்போல் சிரித்தபடி உட்கார்ந்திருக்க, ஸ்லீவ்லெஸ் ப்ளவுசும், பட்டுச் சேலையும், கழுத்தெல்லாம் நகைகளும் அணிந்து, ஐ லவ் ஸ்வாமிஜி, பரந்தம் என்று வைகுண்ட ஏகாதசிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்..

 LinkedIn விஜயப்ரியா

LinkedIn விஜயப்ரியா

நித்யானந்தாவின் உருவத்தை தன்னுடைய கையில் பெரிதாக பச்சை குத்தியிருக்கிறார்.. நித்யானந்தாவை சிவன், விநாயகர் ஆகிய அவதாரங்களாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் அவரை கொண்டாடிவருகிறார். புடவை, ருத்ராட்சம், தங்க ஆபரணங்களுடன் காணப்படும் இவர், மாடர்ன் டிரஸ்களையும் அணிந்து அந்த போட்டோக்களையும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார். அதேபோல, விஜயப்ரியாவின் LinkedIn பக்கத்தில் விஜயப்ரியா 2014ல், கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியல் படித்தவர் என்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, கிரியோல் மற்றும் பிட்ஜின் ஆகியவற்றில் புலமை பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிஜ கைலாசா

நிஜ கைலாசா

கடந்த 2022ல், விஜயபிரியாவை கைலாசாவின் ஐநாவுக்கான தூதராக நியமித்து சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.. அப்போதுதான், இவரது பெயரை பலராலும் அறியமுடிந்தது.. அதுக்காக நிஜமாகவே ஐநாவில் பங்கேற்பார் என்றுதான் யாரும் எதிர்பார்க்கவில்லை.. போலீசிடமிருந்து தப்பியோடிய நித்யானந்தா, கைலாச தேசத்தில் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்வதுடன், ஜெனீவாவின் ஐநா பொதுமன்றத்தில், நித்யானந்தாவின் கைலாசா தேசத்தில் இருந்து உறுப்பினர் ஒருவர் வந்து உரையாற்றியிருந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

 உலக மேப்

உலக மேப்

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கைலாசாவை சேர்ந்த பிரதிநிதிகள் கடந்த மாதம் ஐநா கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்பிற்கு பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நித்தியானந்தா பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்டது. அதனால், நித்தியானந்தா தரப்பினரின் கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் அவையால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது" என்று விளக்கம் தந்துள்ளார்.. நித்யானந்தாவை ஐநா கைவிட்டது என்றே எடுத்துக்கொண்டாலும், கைலாசா நாட்டின் சார்பாக விஜயபிரியா கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட பரபரப்புதான் இன்னமும் அடங்கவில்லை.. அப்படின்னா கைலாசா என்று இருக்கிறதா? உலக மேப்பில் அது எங்கிருக்கிறது?!!

குருபீடம் - பரமசிவம்

குருபீடம் - பரமசிவம்

இதனிடையே, விஜய பிரியா நித்யானந்தா தன்னுடைய ஐநா பேச்சு தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், பகவான் நித்யானந்தா பரமசிவம் பிறந்த இடத்தில் சிலரால் துன்புறுத்தப்பட்டார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்... இந்தியாவை கைலாசா உயர்வாக கருதுகிறது... இந்தியாவை தன்னுடைய குரு பீடமாக மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அதில், ஐக்கிய நாடுகள் சபையில் நான் சொன்ன கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர்... நித்யானந்தா மற்றும் கைலாசாவுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அதில் விஜய பிரியா நித்யானந்தா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+