யார் அந்த தாவூத்? கடலுக்குள் வெடித்த டைடன் நீர் மூழ்கிக்கு போனது எப்படி? அதிர வைக்கும் பின்னணி!
நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்க்க போய், கடலுக்குள் வெடித்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலுக்குள் பாகிஸ்தானை சேர்ந்த தாவுத் என்ற நபர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
டைட்டானிக் கப்பலை பார்க்க செல்வது என்பது உலகம் முழுக்க மிகப்பெரிய சுற்றுலாவாக இருக்கிறது. டைட்டானிக் கப்பலை பார்க்க கோடி கோடியாக செலவு செய்து பலர் செல்வதும் உண்டு. உள்ளே இருக்கும் பொருட்களை மீட்டு வந்து ஏலம் விடுவதற்கும், பிளாக் மார்க்கெட்டில் விற்பதற்கும் கூட பெரிய கும்பல் ஒன்று உள்ளது.

அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate. இவர்களின் நீர்மூழ்கி கப்பல்தான் தி டைட்டன்.
டைட்டன் நீர்மூழ்கி மூலம் இதற்கு முன் பயணிகள் பலர் டைட்டானிக் கப்பலை சென்று பார்த்து உள்ளனர். 10 முறைக்கும் மேல் இந்த டைட்டன் டைட்டானிக்கை சென்று வெற்றிகரமாக பார்த்துவிட்டு திரும்பி உள்ளது. இதில் ஒரே ஒரு முறை.. டைட்டன் நீர் மூழ்கி சுமார் 2 மணி நேரங்கள் வரை காணாமல் போன சம்பவங்கள் கூட நடந்து உள்ளன.
ஆனால் அவை உடனே உடனே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த முறை டைட்டானிக்கை பார்க்க சென்று டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் காணாமல் போய் உள்ளது. 3 நாட்கள் ஆகியும் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதிர்ச்சி தகவல்கள்: இந்த நிலையில் இந்த கப்பலில் பயணம் செய்த பயணிகள் குறித்த அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டைட்டன் கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர்.
பாகிஸ்தான் தாவுத்: இந்த நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, ஆகியோர் பயணம் செய்து உள்ளனர். இவர் பிரிட்டிஷ் தொழிலதிபர் என்றாலும் பாகிஸ்தான்தான் இவரின் பூர்வீகம்.
ஷாஜதா தாவூத், 48, பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பிரின்ஸ் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தில் போர்ட் உறுப்பினராகவும் உள்ளார்.எங்ரோ கார்ப்பரேஷனின் துணை தலைவராகவும் இவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிறுவனம் உரங்கள், உணவு மற்றும் எரிசக்தி உற்பத்தி செய்கிறது. இவர் அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் உலகளாவிய டெஸ்டிங் மார்க்கெட்டிங் பிரிவில் எம்.எஸ்சி. மற்றும் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தவர். இவர் ரசாயனங்கள் தயாரிக்கும் தாவூத் ஹெர்குலஸ் கார்ப்பரேஷனின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

பாகிஸ்தானிலேயே பணக்கார குடும்பங்களில் இவர்களின் குடும்பமும் ஒன்று. சுற்றுலாவில் அதிக ஆர்வம் கொண்ட இவர் டைட்டானிக்கை பார்க்க சென்று கடலில் மரித்து போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறிவிப்பு: டைட்டன் நீர்மூழ்கியின் தேடுதல் பயணத்தை இன்று அதிகாலை முடிப்பதாக அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. பயணிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் நீர்மூழ்கியின் பாகங்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.
நீர்மூழ்கி கப்பலின் மேல், கீழ், பின் பக்க பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை நிறைவு பெற்றதாகவும், நீர்மூழ்கி கடலில் மூழ்கி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு அதில் பயணம் செய்த 5 பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications