அடிதூள்! அவமானங்களை கடந்து கலிபோர்னியா நகரில் மேயரான இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்! புதிய சாதனை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ஒரு நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்கி ஹோதி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த நகரில் இந்திய வம்சாளியை சேர்ந்தவர் மேயராக தேர்வாவது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்காவில் பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் இருக்கும். எனவே, ஒவ்வொரு நகரிலும் மேயர் மற்றும் மாகாணங்களில் ஆளுநர் பொறுப்புகளுக்கு யார் வருகிறார்கள் என்பது ரொம்பவே முக்கியம்.

அதிலும் நகரங்களில் மேயர் பதவிக்கு வருபவர்கள் ரொம்ப முக்கியம். நகரின் எதிர்காலமே மேயர் எடுக்கும் முடிவுகளில் தான் உள்ளது என்பதால், மேயர் தேர்வில் அங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இந்தியர் தேர்வு

இந்தியர் தேர்வு

இதற்கிடையே அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லோடி நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைக்கி ஹோதி என்ற சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராகும்.. அந்த நகரில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். மைக்கி ஹோதி அங்குள்ள ஐந்தாவது மாவட்டத்தில் இருந்து தேர்வானவர். முன்பு இந்த நகரத்தின் மேயராக மார்க் சாண்ட்லர் என்ற பெண் மேயர் இருந்த போது துணை மேயராக இருந்து அனுபவம் பெற்றவர் மைக்கி ஹோதி.

மைக்கி ஹோதி

மைக்கி ஹோதி

மேயராக பதவியேற்ற மைக்கி ஹோதி கூறுகையில், "பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் லோடி நகருக்கு வருகிறார்கள். லோடி பாதுகாப்பான நகரம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இங்கு அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்கிறது. சிறந்த மனிதர்கள் வாழும் இங்கு பலதரப்பட்ட கலாச்சாரம் நிலவுகிறது. கடின உழைப்பாளிகளால் நிரம்பிய இந்த நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். நகரின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து செயல்களையும் நிச்சயம் நான் செய்வேன்" என்று அவர் தெரிவித்தார்.

புறக்கணிப்புகள்

புறக்கணிப்புகள்

மைக்கி ஹோதி கடந்த 2008இல் டோகே கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்.. அவர் கல்லூரி படிக்கும் போது பல துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் மீது வன்முறை நிகழ்வுகளும் கூட நடந்ததாக அவர் வேதனைத் தெரிவித்திருந்தார். இப்போது அதே மைக்கி ஹோதி நகரின் மேயராக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்று மதங்களையும் அவர்கள் நம்பிக்கையும் அனுமதிப்பது மக்களின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

சீக்கியர்

சீக்கியர்

மைக்கி ஹோதி சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் ஆம்ஸ்ட்ராங் சாலையில் சீக்கியர் கோவிலை நிறுவுவதில் அவரது குடும்பத்தினரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மைக்கி ஹோதி பெற்றோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், சிறு வயதிலேயே அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டனர். அமெரிக்காவில் இந்தியாவில் இருந்து சேன்ற பலரும் பலரும் இப்போது கடுமையாக உழைத்து நல்ல நிலைக்கு வந்துள்ளனர். இதனால் அங்கு அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு உள்ளது.

இனவெறி

இனவெறி

இருப்பினும், இதனால் உள்ளூர்வாசிகள் இந்தியர்கள் மீது கடுங்கோபத்தில் உள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக இந்தியர்களால்தான் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள். இதனால் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி போக்கும் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அங்குப் பெண் ஒருவர் இந்தியர்களை இனவெறி ரீதியாக விமர்சித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

அதேநேரம் வெளிநாடுகளில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இந்தியர்கள் வருவதும் அதிகரித்தே வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் தேர்தலில் கூட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரானார். இந்து ஒருவர் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். மேலும், இளம் வயது பிரதமர் என்று பெருமையையும் ரிஷி சுனக் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+