Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூடுதல் டேட்டா தேவை.. கோவாக்சினுக்கு அவசர அனுமதி தராத "ஹு".. இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் நேற்றும் அவசர அனுமதி வழங்கவில்லை. இதுவரை 4 முறை சந்திப்பு கூட்டம் நடத்தியும் கோவாக்சினுக்கு அவசர அனுமதி கிடைக்கவில்லை.

ஒரு கொரோனா வேக்சினுக்கு உலக சுகாதார மையத்தின் அவசர அனுமதி கிடைப்பது மிக முக்கியம். அப்போதுதான் அந்த வேக்சின் எடுத்தவர்கள் எளிதாக வெளிநாடு செல்ல முடியும், அவசர அனுமதி இல்லை என்றால் அந்த வேக்சின் இன்னும் உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தம்.

வேக்சினுக்கான அவசர அனுமதி என்பது அதன் திறன், பாதுகாப்பு, தரம், ஒவ்வொரு நாட்டு இனக்குழு மக்களிடம் எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து வழங்கப்படும். இந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் ஒரு வேக்சின் நிறுவனம் உலக சுகாதார மையத்திடம் தரவுகளை வழங்க வேண்டும்.

 மறுப்பு

மறுப்பு

ஆனால் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் வேக்சினுக்கு தொடர்ந்து உலக சுகாதார மையம் அவசர அனுமதி தர மறுத்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய அவசர அனுமதிக்கான ஆலோசனை இன்னும் முடியவில்லை. இதுவரை 4 முறை மீட்டிங்குகள் நடந்துள்ளது. ஆனாலும் அவசர அனுமதி கிடைக்கவில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

கோவாக்சின் குறித்து கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கேட்டு வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் இது தொடர்பாக அனைத்து தரவுகளையும் வழங்கிய போதிலும் கூடுதலாக பாதுகாப்பு அம்சம் குறித்து ஒரு தகவல் மிஸ் ஆவதாக உலக சுகாதார மையம் தெரிவித்தது. இதனால் உடனே பாரத் பயோடெக் நிறுவனம் போன வாரம் அந்த தகவலை அனுப்பியது.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
    ஆனால் மீண்டும் மறுப்பு

    ஆனால் மீண்டும் மறுப்பு

    இந்த நிலையில் நேற்று இரவு நடந்த ரிவ்யூ மீட்டிங்கில் கோவாக்சினுக்கு மீண்டும் அவசர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேக்சின் பயன்பாட்டின் ரிஸ்க் மற்றும் பாதுகாப்பு குறித்து டேட்டா மற்றும் உறுதி பத்திரத்தை பாரத் பயோடெக் வழங்கவில்லை. அதாவது இந்த வேக்சின் எடுத்தால் எவ்வளவு ரிஸ்க், என்ன ரிஸ்க் என்பது குறித்த விவரங்களை தரவில்லை என்று கூறப்படுகிறது.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார மையம் கேட்டுள்ளது. இந்த தகவல் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் கிடைத்த பின் வரும் நவம்பர் 3ம் தேதி கடைசி ரிவ்யூ மீட்டிங் நடக்கும். இதில் பெரும்பாலும் கோவாக்சினுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+