யாருக்கு உளவுத்தகவல் போனாலும்.. அவங்கதான் பொறுப்பு.. அமெரிக்காவிற்கு புதிய செக் வைத்த ஈரான்!
நியூயார்க்: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் எப்போது, எப்படி பதிலடி அளிக்கும் என்று எனக்கு தெரியும்.. அது தொடர்பான உளவு தகவல்கள் என்னிடம் உள்ளன என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் பிடன் பேட்டி அளித்து இருந்தார். இதற்கு ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் அளித்த பதிலில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து யாருக்கு தெரிந்து இருந்தாலும் அவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்பட வேண்டும். இஸ்ரேல் தாக்குதலின் நேரம் மற்றும் முறை பற்றி அறிந்தவர்கள்தான் அந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதாவது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பிடன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இஸ்ரேல் ஈரானை எப்படி, எப்போது தாக்கப் போகிறது' என்று சிலருக்கு தெரிந்து இருக்கலாம்... அப்படி தெரிந்து இருக்கும் நபர்கள்.. இஸ்ரேலின் தாக்குதலுக்கு மறைமுகமாக, நேரடியாக ஆதரவு அளிக்கும் நபர்கள்தான்.. இஸ்ரேலின் தாக்குதலால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் எப்போது, எப்படி பதிலடி அளிக்கும் என்று எனக்கு தெரியும்.. அது தொடர்பான உளவு தகவல்கள் என்னிடம் உள்ளன. ஆனால் அதை வெளியிட முடியாது என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் பிடன் பேட்டி அளித்து இருந்தார். இதைத்தான் தற்போது ஈரான் விமர்சனம் செய்துள்ளது.
மோதல் மோசம்: இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபரும், அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
மோசமான சூழல்: சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான நாளை இஸ்ரேல் குறித்துவிட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது. நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் தெரிவித்து உள்ளார்களாம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடக்கும். இஸ்ரேல் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும். ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications