சுத்தமில்லாதவங்க! இந்தியர்களை இணையத்தில் விமர்சித்த அமெரிக்கர்கள்! 2 நாளில் அதிகரித்த வெறுப்பு! ஏன்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியர்களை அமெரிக்கர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். தீவிர வலதுசாரி அமெரிக்கர்கள் இணையத்தில் இந்தியர்களுக்கு எதிராக கடுமையான போஸ்டுகளை செய்ய தொடங்கி உள்ளனர். இந்தியர்கள் சுத்தம் இல்லாதவர்கள் என்றெல்லாம் கடுமையாக பேச தொடங்கி உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக வரக்கூடிய போஸ்டுகளின் சாராம்சம் இதுதான்.. இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை எடுத்துக்கொள்கிறார்கள்.. இந்தியர்களிடம் சுத்தம் இல்லை.. இந்தியர்களின் உணவு மிக மோசமானது. அதை சாலை ஓரங்களில் சத்தமின்றி சமைக்கின்றனர்.

india america

இந்தியர்கள் சாலை ஓரம் மலம் கழிக்கிறார்கள். இந்தியர்கள் அமெரிக்கா வந்து அமெரிக்காவின் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள். சொந்த நாட்டில் ஜாதி, மத பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை பிரச்சனையில் தள்ளிவிட்டு சொகுசாக அமெரிக்காவில் சிலர் குடியேறிவிடுகிறார்கள். ஆனால் அமெரிக்காவிற்கும் அவர்கள் நேர்மையாக இருப்பது இல்லை.

அமெரிக்கர்கள் இருக்க வேண்டிய இடங்களை இந்தியர்கள் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். இந்தியாவை அவர்களால் முன்னேற்ற முடியவில்லை. இதனால் அமெரிக்கா வந்து எங்கள் நாட்டை கெடுக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் பல கமெண்ட் செய்து வருகின்றனர்.

india america

இந்தியர்கள் பதிலடி:

அமெரிக்கர்களின் இந்த கோபமான விமர்சனங்களுக்கு இந்தியர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அமெரிக்கர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

அமெரிக்கர்கள் பள்ளிக்கு கூட துப்பாக்கி கூட எடுத்து செல்ல தொடங்கி உள்ளனர். அவர்கள் வேலைவாய்ப்புக்கு பணிகளை செய்யாமல் பாலின அடையாளங்களை முன்னிறுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

இந்தியர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அதனால் அவர்கள் முன்னேற்றம் அடைகின்றனர். அமெரிக்கர்களின் வேலைகளை இந்தியர்களை பறிக்கவில்லை. அமெரிக்கர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் . போதைக்கு அடிமையாகி வீட்டிற்கு உள்ளேயே.. சாலை ஓரங்களில் படுத்துக்கிடக்கிறார்கள்.. அப்படி இருக்க அவர்கள் இந்தியர்களை விமர்சனம் செய்கிறார்கள், என்று இந்திய நெட்டிசன்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.

india america

என்ன காரணம்?:

1. இந்தியர்களை இப்படி திடீரென விமர்சனம் செய்ய நிறைய காரணங்கள் உள்ளன. அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முயன்ற குடியரசு கட்சி விவேக் ராமசாமி.. அமெரிக்க வெள்ளையர்கள் சோம்பேறிகள் என்று கூறி இருந்தார்.

2. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையின் AIக்கான மூத்த கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார்.

3. விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்தியர்கள் பலர்.. எச் 1 பி விசாவை அதிகரிக்க வேண்டும் என்றுள்ளனர்.

4. 2023 நிதியாண்டில் அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 72.3% இந்தியர்கள் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அங்கே இந்தியர்கள் இதனால் மேலும் குடியேறுவார்கள் என்ற அச்சம் உள்ளது.

india america

5. அமெரிக்காவின் உயர் பொறுப்புகளில் சுந்தர் பிச்சை, சத்யா நாடெல்லா உள்ளிட்ட இந்தியர்கள்தான் இருக்கிறார்கள்.

6. அங்கே தற்போதைய துணை அதிபர் கூட இந்தியரான கமலா ஹாரிஸ்தான்.

7. அமெரிக்கர்கள் இப்போது தீவிர வலதுசாரிகள். இந்தியர்கள் பலரும் வலதுசாரிகள்தான். ஆனால் இரண்டு தரப்பும் தங்களின் சொந்த மதத்தை ஆதரிப்பதால்.. இவர்களுக்கு இடையே பெரிய வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. இன்னும் பல விஷயங்கள் இந்த வெறுப்பை அதிகரித்து இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதலுக்கு காரணமாக மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+