கொலம்பியாவிற்கு நேர்ந்த அதே கதிதான்.. இந்தியாவிற்கும்! டிரம்ப் கையில் எதிர்பார்க்காத மாஸ்டர்பிளான்!
நியூயார்க்: அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவின் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானங்கள் அத்துமீறி குடியேறியவர்களின் சொந்த நாட்டிற்கே கொண்டு சென்று விடும். இந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு அந்தந்த நாடுகள் அனுமதி தர வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை. அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பலரை இந்தியா நாடு கடத்த திட்டமிட்டு உள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.

ஆனால் அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற்றப்பட உள்ளனர். அத்துமீறி குடியேறியவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.. இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
கொலம்பியா பிரச்சனை:
அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக கொலம்பியா நாடு மீது கூடுதல் வரிகளையும் கூட அவர் விதித்து உள்ளார்.
அமெரிக்காவில் 4 விதமான மக்கள் அதிக அளவில் அகதிகளாக, ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். கொலம்பியா மக்கள், மெக்சிகோ மக்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் அதிக அளவில் அங்கே ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக கொலம்பியா நாடு மீது கூடுதல் வரிகளையும் கூட அவர் விதித்து உள்ளார். கொலம்பியா மக்களை அந்நாட்டிற்கு திரும்பி அனுப்ப அமெரிக்க விமானப்படை விமானம் தயாராக இருந்தது.
ஆனால் இதை தரையிறங்க அனுமதிக்க மாட்டோம் என்று கொலம்பியா அரசு கூறி விட்டது. இதையடுத்து பிளைட்டை தரையிறங்க விடுங்க.. இல்லைனா வரி கூடிக்கிட்டே போகும் என்று எச்சரித்த டிரம்ப் கொலம்பியாவின் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்தார். இதையடுத்து வேறு வழியின்றி அமெரிக்காவில் இருந்து வரும் அகதிகள் விமானத்தை கொலம்பியா ஏற்றுக்கொண்டுள்ளது.
அதோடு அமெரிக்காவில் இருந்து கொலம்பியா மக்களை வெளியேற்ற அதிகாரபூர்வமாக கொலம்பியா அரசே விமானங்களை அனுப்பி உள்ளது. டிரம்ப் விதித்த வரியால் அச்சம் அடைந்து வேறு வழியின்றி கொலம்பியா இறங்கி வந்துள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் கொலம்பியா டிரம்பின் அதிரடி காரணமாக இறங்கி வந்துள்ளது.
இந்தியாவிற்கும் ஏற்படலாம்:
இதே நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம். அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை வெளியேற்றும் போது அதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த விமானத்தை வரவேற்க தயாராக வேண்டும். ஒருவேளை இந்தியா எதிர்க்கும் பட்சத்தில் இந்தியா மீதும் கூடுதல் இறக்குமதி வரியை டிரம்ப் விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications