கணவருக்கு சோடாவில் விஷம் கலந்த மனைவி! அமெரிக்காவில் அதிர்ச்சி! விசாரணையில் திடுக்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி அவரை கொல்ல முயற்சித்துள்ளார். இதை சிசிடிவி காட்சிகள் காட்டிக் கொடுத்துள்ளன. பிறகு மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் தகவல்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிசவுரி பகுதியைச் சேர்ந்தவர் மிச்செல்லே ஒய் பீட்டார்ஸ் (47). இவர் தனது கணவரின் 50ஆம் வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கணவரும் கலந்து கொண்ட நிலையில் இத்தனை பிரம்மாண்டமான பிறந்தநாளை மனைவி ஏற்பாடு செய்திருந்தாரே அவரை பாராட்டலாம் என கணவருக்கு தோன்றவில்லை போலும்.

crime america

இதனால் பீட்டர்ஸுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் சண்டை போட்டிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! பீட்டர்ஸ் என்ன செய்தார் தெரியுமா? கணவருக்கு சோடாவில் களைக்கொல்லியை கலந்து கொடுத்துவிட்டார். அதனை அவருடைய கணவர் வாங்கி குடித்துள்ளார்.

ஆனால் டேஸ்ட் வேறு மாதிரி இருக்கவே அதை வேண்டாம் என சொல்லிவிட்டு சோடாவை குடித்திருக்கிறார். சில வாரங்கள் கழித்துதான் அதன் பக்க விளைவுகள் தெரிய ஆரம்பித்தன. பீட்டர்ஸ் கணவருக்கு தொண்டை வறண்டு போய், பேதி, வாந்தி ஏற்பட்டது. இதனால் மனைவி ஏதோ செய்திருக்கிறார் என்று கணவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை அவர் பார்த்த போது பிரிட்ஜில் இருந்து பீட்டர்ஸ் சோடாவை எடுத்தார். பிறகு வீட்டில் இருந்த களைக் கொல்லி பாட்டிலையும் எடுத்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. சிறிது நேரத்தில் இரண்டு பொருட்களையும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டுள்ளார்.

அவர் மனைவியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லியுள்ளார். தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளையும் அவர் சொல்லியுள்ளார். அதற்கு மனைவியோ, "உங்களுக்கு கொரோனா வந்திருக்கும். எனவே குழந்தைகளிடம் நெருங்கி வராதீங்கள் " என கூறியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்து போலீஸுக்கு போயுள்ளார்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து பீட்டர்ஸை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. கணவரின் ரூ 4 கோடி காப்பீட்டுத் தொகையை பெற பீட்டர்ஸ் இவ்வாறு செய்தாரா என்பது தெரியவில்லை. வங்கியில் இருவரது ஜாயின்ட் அக்கவுண்டிலும் பீட்டர்ஸ்தான் பணம் செலுத்துவார். ஆனால் அண்மைக்காலமாக அந்த பணம் குறைந்துள்ளது. பீட்டர்ஸிடம் விசாரணை நடத்தினால்தான் எதற்காக கணவரை கொல்ல முயற்சித்தார் என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+