பாலில் கூட பாய்சன்! கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸா? எச்சரிக்கை விடுத்த ஹூ.. என்னங்க சொல்றீங்க.!
நியூயார்க்: கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் பசு மாடுகளிலிருந்து கறந்த பாலில் கூட பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி காரணமாக பல மாவட்டங்களில் உச்சபட்ச கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து பறவை காய்ச்சல் அறிகுறிகளோடு யாராவது இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல்: இதன் காரணமாக தமிழக எல்லைகளிலும் கால்நடை துறையினரும் சுகாதாரத் துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பறவை காய்ச்சல் பரப்பும் ஹெச்5என்1 வைரஸ் கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளதோடு இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பாலில் வைரஸ்: அமெரிக்காவில் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பசு மாடுகளில் இருந்து கறக்கப்பட்ட பாலில் பறவை காய்ச்சலை பரப்பும் ஹெச்5என்1 வைரஸ் இருப்பது கண்டறிக்கப்பட்டுள்ளதாகவும் இது மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம்: மேலும் இதனை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளதோடு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கறந்த பாலை அருந்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாலில் இருக்கும் வைரஸ்களை அழிக்க வேண்டியது அவசியம் எனவும் அது எளிதான நடைமுறை என்பதால் தற்போது சுத்திகரிக்கப்பட்ட பாலை பயன்படுத்துவதே பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்: பொதுவாக விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் பறவைக் காய்ச்சலால் மனிதர்கள் எளிதில் உயிரிழக்க வாய்ப்புள்ளது. காய்ச்சல் பறவைகள் மனிதர்கள் மட்டுமல்லாது தற்போது வவ்வால்கள், பூனைகள், கரடி, நரி, பென்குயின்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பறவை காய்ச்சல் பரவும் விலங்குகளின் பட்டியலில் பசுமாடுகளும் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications