53 வயது பெண்ணை அடித்து கொன்ற ஊட்டி எஸ்ஐ.. கொரோனாவால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் 53 வயது பெண் கொரோனாவால் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவரை கியூ பிரிவு உதவி ஆய்வாளர் அடித்து கொன்று நாடகமாடியது அம்பலமானது.
உதகையில் இருக்கக் கூடிய கியூ பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முஸ்தபா. 55 வயதான இவருக்கும் உதகை அருகே உள்ள காந்தல் புதுநகர் பகுதியைச் சேர்ந்த மாகி (53) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை முஸ்தபா, மாகியின் உறவினர்களுக்கு போன் செய்துள்ளார்.

கொரோனா
அப்போது அவர்களிடம் மாகி கொரோனா தொற்றால் இறந்துவிட்டதாகவும் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறி காரில் கொண்டு சென்று உடலை வழங்கியுள்ளார். வாகனத்தில் இருந்து இறக்கிய போது மாகியின் உடல் துணியால் சுற்றப்பட்டிருந்தது.

போலீஸார்
உறவினர்கள் மாகியின் உடலை பெற்று பார்த்த போது அவரது முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. இதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் உதகை போலீஸாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீஸார் ஆய்வு செய்தனர்.

பிரேத பரிசோதனை
இதையடுத்து மாகியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் முஸ்தபாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கும் மாகிக்கும் கள்ளக்காதல் இருந்தது. இவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் மாகியை முஸ்தபா கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

தீவிர விசாரணை
இதையடுத்து முஸ்தபாவை போலீஸார் கைது செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது தெரியவரும். மேலும் முஸ்தபாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications