Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு.. தனிப்படை போலீஸாரிடம் சிக்கிய முக்கிய ஆதாரம்!.. முடிவுக்கு வருமா?

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் புதிய ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. அப்போது அந்த நேரத்தில் இரவுக் காவலாளியான ஓம்பகதூர் தடுக்க முயன்ற போது அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் பொம்மையும் வாட்ச்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெறும் பொம்மைகளுக்காகவும் வாட்ச்களுக்காகவும் ஒரு கொலையை செய்து இத்தனை ரிஸ்க்கை யாராவது எடுத்திருப்பார்களா? என்பதுதான் அனைவரின் சந்தேகமாக உள்ளது.

பங்களாவில்

பங்களாவில்

இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பங்களாவில் ஏராளமான காவலாளிகள் இருக்க கொள்ளை சம்பவத்தின் போது வெறும் இரு காவலாளிகள் மட்டுமே பணியில் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடநாடு எஸ்டேட்டுக்கு கோவையிலிருந்து வனப்பகுதி வழியாக தடையில்லா மின்சாரம் பிரத்யேகமாக கொண்டு வரப்படுகிறது.

நள்ளிரவு மின் தடை

நள்ளிரவு மின் தடை

அப்படியிருந்தும் கொள்ளை சம்பவம் நடந்த போது நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஏன்? சிசிடிவி செயல்படாமல் போனது ஏன் என்பது குறித்தெல்லாம் விரிவான விசாரணை நடத்தப்படவில்லை என தொடர்ந்து பலர் குற்றச்சாட்டுகளையும் சந்தேகங்களையும் எழுப்பி வருகிறார்கள்.

மின்சாரம் துண்டிப்பு

மின்சாரம் துண்டிப்பு

இந்த நிலையில் கொடநாடு பங்களாவில் இருந்துதான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரம் கிடைத்தவுடன் தனிப்படை போலீஸார் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கென தனியாக செயல்பட்டு வரும் சப்ஸ்டேஷனில் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் மின்சார வாரியத்திலிருந்து மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என அறிக்கையை மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ளது.

ஜெனரேட்டர்

ஜெனரேட்டர்


தடையில்லா மின்சாரமும் ஒரு வேளை தடை ஏற்பட்டால், தானாக இயங்கும் ஜெனரேட்டர்களின் செயல்பாடுகளை நிறுத்தியது யார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இத்தனை ரிஸ்க் எடுத்து கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றால் அங்கு ஏதேனும் முக்கிய கோப்புகள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு வலுக்கிறது. கொடநாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், "இந்த பங்களாவில் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கொள்ளை முயற்சி நடந்ததாகவும் அப்போது அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அவர்களை கண்டதும் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டதாகவும்" அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போதே சிசிடிவி கேமராக்களையும் அங்கிருந்த கணினிகளையும் இயக்கி வந்த ஆபரேட்டர் தினேஷ் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் இறந்தார், அது போல் மனைவி, குழந்தையுடன் கேரளாவுக்கு சென்ற போது சயான் ஓட்டி சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி அதில் மனைவியும் குழந்தையும் இறந்தனர். இத்தனை மர்ம மரணங்களும் நடந்துள்ளதால் நிச்சயம் பங்களாவிலிருந்து ஏதேனும் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இதை யார் சொல்லி கொள்ளையர்கள் செய்தார்கள் என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+