நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட்
ஊட்டி: இப்போது இந்தியா முழுவதுமே டேட்டிங் செயலிகள் ஏக பிரபலமாகி வருகின்றன. அதில் தனது சுய விவரங்களை பதிவு செய்து பெண்களுடன் டேட்டிங் செய்ய இப்போது பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் டேட்டிங் செயலியை பயன்படுத்துவது அதிகமாக உள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், டேட்டிங் செயலியில் தனது சுய விவரங்களை பதிவு செய்து பெண்களுடன் டேட்டிங் செய்ய விரும்பினார். அவருக்கு 20 லட்சம் பறிபோயிருக்கிறது.
டேட்டிங் செயலிகள் மூலம் நடக்கும் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. அழகான பெண்களின் புகைப்படங்களை இணையத்திலிருந்து எடுத்து, போலி பெயர்களில் கணக்குகளைத் தொடங்குவார்கள். உங்களைக் கவரக்கூடிய வகையில் பேசத் தொடங்கி, மிகக் குறுகிய காலத்திலேயே அதிக நெருக்கமானவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள்.முதலில் உங்களிடம் அன்பாகப் பேசுவார்கள்.

50 லட்சம் வரை முதலீடு
பிறகு தாங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதாகக் கூறுவார்கள். உங்களை ஒரு போலி இணையதளத்தில் முதலீடு செய்ய வைப்பார்கள். ஆரம்பத்தில் ஒரு சிறிய லாபத்தைக் காட்டி (உதாரணமாக ₹40,000-க்கு ₹5,000 லாபம்), உங்களை பெரிய தொகையை (₹20 முதல் 30 அல்லது 50 லட்சம் வரை) முதலீடு செய்யத் தூண்டுவார்கள். பெரிய தொகையைச் செலுத்தியவுடன் அந்த நபர் மறைந்துவிடுவார். இப்படியான மோசடிகள் அதிகமாக நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
டேட்டிங் செயலி
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், டேட்டிங் செயலியில் தனது சுய விவரங்களை பதிவு செய்து பெண்களுடன் டேட்டிங் செய்ய தயாராக இருந்துள்ளார். அப்போது பெங்களூருவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஸ்வேதா என்ற பெயரில் இளம்பெண் ஒருவர் அரசு அதிகாரியுடன் செயலி மூலம் அறிமுகமாகி டேட்டிங் செய்திருக்கிறார். இருவரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு 2 பேரும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பழகி உள்ளார்கள். அந்த இளம்பெண், பெங்களூருவில் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும், இந்த தொழில் மட்டும் இன்றி ஆன்லைன் வர்த்தகம் மூலமும் லாபம் ஈட்டி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இளம் பெண் பேச்சில் மயங்கினார்
அவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்யுமாறு அரசு அதிகாரியிடம் ஆசைவார்த்தை கூறினார். மேலும் ஆன்லைனில் வர்த்தகம் மேற்கொள்வதற்கு இணையதள முகவரிகளை இளம்பெண் அனுப்பி உள்ளார். இளம்பெண்ணின் பேச்சில் மயங்கிய அரசு அதிகாரி, குறிப்பிட்ட இணையதள முகவரியில் சென்று முதல் கட்டமாக ரூ.43 ஆயிரம் முதலீடு செய்தார். அப்போது அவருக்கு முதலீடு செய்ததை விட கூடுதலாக பணம் கிடைத்துள்ளது.
20 லட்சம் காலி
இதனால் நம்பிக்கை அடைந்த அரசு அதிகாரி, இளம்பெண் தூண்டுதலின் பேரில் பலமுறை ஆன்லைன் மூலம் மொத்தம் ரூ.20 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், அரசு அதிகாரிக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. பணத்தை பெற பல வழிகளில் முயற்சி செய்தும், அவரால் முடியவில்லை. அந்த இளம்பெண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து ஆன்லைன் மூலம் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரியிடம் இளம் பெண் ஒருவர் 20 லட்சம் ஏமாற்றிய சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications