ஊட்டிக்கு ஹனிமூன் போன இளம் பெண்.. லாட்ஜ் குளியலறையில் பார்த்தால்.. அரண்டு போய்.. திடுக் தகவல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடியில், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் குளியலறைக்கு போன இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த லாட்ஜ் ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, மசினக்குடி, முதுமலை, குன்னூர், கொடநாடு, கோத்தகிரி என எல்லா இடங்களுமே சுற்றுலா தளங்கள் ஆகும். ஆண்டு முழுவதுமே குளுகுளுவென இருக்கும். இதனால் ஆண்டு முழுவதுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் மிக அதிக அளவில் வருவார்கள்.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும், பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் இருக்கின்றன.
சுற்றுலா வருவோருக்கு சுகமான அனுபவங்களே இருக்கின்றன. ஒரு சிலருக்கு கசப்பான அனுபவங்களும் நடக்கின்றன. அப்படித்தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிக்கு நடந்துள்ளது.புதுமணத்தம்பதிக்கு நடந்த சம்பவம் ஒன்றை கேட்டால் ஷாக்காகிவிடுவீர்கள்.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 25 வயதான இளம் தம்பதி வியாழக்கிழமை அன்று நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த தம்பதியினர் மசினகுடி அடுத்த ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்கள்.
இதில் கணவருடன் வந்த இளம்பெண், கழிப்பறையுடன் கூடிய குளியலறைக்கு சென்றிருக்கிறார். அப்போது குளியலறை ஜன்னலின் மறைவான பகுதியில் இளைஞர் நின்றுள்ளார். அவர் திடீரென இளம்பெண்ணை செல்போனால் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உடனே சத்தம் போட்டார்.
இதையடுத்து இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த இளம்பெண்ணின் கணவரும், விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளும் இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.
அவர் பெயர் ஷிண்டு (வயது 23) என்பதும் மசினக்குடியைச் சேந்தவர் என்பதும், தனது செல்போனால் குளியலறையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்ததும், இதே தனியார் விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குளியலறையில் இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த ஷிண்டுவை, மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications