Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசைவ உணவுக்கு தடை! ‘நாட்டாமை’ தீர்ப்பை மீறாத மக்கள்! 2024இல் இப்படி ஒரு கிராமம்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: பல தலைமுறைகளாக அசைவ உணவே சாப்பிடாமல் ஒரு கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதை மீறி உண்பவர்களின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கமும் இப்போதுவரை இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக மாமிச உணவே சாப்பிடாமல் பல ஆண்டுகளாக ஒரு கிராமமே இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும் வேறு வழியில்லை. இந்தக் கிராமம் ஏதோ வட இந்தியாவில் இல்லை. தமிழ்நாட்டில்தான் உள்ளது. மலைக்கிராமம் என்றால் உடனே நினைவுக்கு வரும் நீலகிரியில்தான் இப்படி ஒரு கிராமம் இருக்கிறது.

Nilgiri Tamil Nadu

நீலகிரியில் ஒரு காலத்தில் பழங்குடி மக்களே அதிகம் வாழ்ந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களின் கோடை வாச ஸ்தலமாக இது மாற தொடங்கியது முதல் விடுதலைக்குப் பிறகு பல வகுப்பினர் இங்கே குடியேறத் தொடங்கிவிட்டனர். ஆகவே, இப்போது பழங்குடி மக்களின் கட்டுப்பாட்டை நீலகிரி முக்கால்வாசி இழந்துவிட்டது.

இந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்குச்சி ஊராட்சி பஞ்சாயத்திற்கு உட்பட்டுள்ளது தீனட்டி. இதிலேயே கீழ் தீனட்டி, மேல் தீனட்டி என்று இரண்டு கிராமங்கள் ஒரே பெயரில் உள்ளன. இந்தக் கிராமத்தினை ஒட்டி மலைகள் அடுக்கடுக்காக வரிசையாக இருப்பதைப் பார்ப்பதே ஒரு தனி இன்பமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கிராம மக்கள் வேளாண்மை தொழிலைத்தான் நம்பி உள்ளனர்.

பழங்காலம் தொட்டே இங்கே உள்ள பழங்குடி மக்கள் சிவ வழிபாட்டைக் கடைப்பிடித்து வருகின்றனர். இங்கே அதிகம் ஆடம்பரம் இல்லாத ஒரு சிறிய சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிவராத்திரியின் போது திருவிழா நடைபெறுவது வழக்கம். சிவனைத் தெய்வமாக வழிபட்டு வரும் இந்த மக்கள் யாரும் அசைவ உணவை உண்பதில்லை. ஊரில் யாரும் வீட்டில் அசைவ உணவைச் சமைப்பதும் இல்லை. முட்டையைக் கூட இவர்கள் சாப்பிடுவது இல்லை. இந்த மலை எப்படி சுத்தமாக இருக்கிறதோ அதேபோல் இம்மக்களும் சுத்த சைவமாக இருந்து வருகின்றனர். தலைமுறை பல மாறினாலும் இவர்களின் பழக்கம் கொஞ்சம் கூட மாறவே இல்லை.

Nilgiri Tamil Nadu

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே கிராமம்தான். "எனக்கு 43 வயதாகிறது. இதுவரை ஒரு முறை கூட அசைவ சாப்பாட்டைச் சாப்பிட்டது இல்லை. சின்னதாக ருசி கூட பார்த்தது இல்லை. எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே சைவம்தான். இதுவரை ஊட்டச்சத்துக் குறைபாடு வந்ததில்லை. எங்கள் ஊரில் யாருக்கும் புற்றுநோய் போன்ற நோய் அறிகுறிகள் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரோக்கியமாகத்தான் வாழ்கிறோம். எங்கள் கிராமத்தில் மொத்தம் 160 வீடுகள் உள்ளன. இங்கே பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம்தான் செய்து வந்தோம். இப்போது காலப்போக்கில் கொஞ்சம் செயற்கை உரங்களை, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம்" என்கிறார்.

Nilgiri Tamil Nadu

இவரைத் தொடர்ந்து பேசிய இளைஞர் மனோ, "நாங்கள் கடந்த 8 தலைமுறைக்கு மேலாகச் சைவம்தான். அதற்கு முன்னால் எப்படி என்பது எனக்குத் தெரியாது. ஆனால், தாத்தா, பாட்டி எல்லாம் அவர்கள் மூதாதையர்கள் சைவ உணவைத்தான் சாப்பிட்டு வந்ததாகச் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். அசைவம் சாப்பிடக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. மீறிச் சாப்பிட்டால் ஊருக்குள் சேர்க்கமாட்டார்கள். ஊரைவிட்டு வெளியே சென்றாலும் அசைவம் சாப்பிடக் கூடாது. நாங்கள் லிங்காயத்து இனத்தைச் சேர்ந்த மக்கள்.

ஆகவே கழுத்தில் அனைவரும் ருத்திராட்ச கொட்டை அணிந்திருப்போம். கிராமத்தில் உள்ள அனைவரும் கட்டி இருப்போம். அதேபோல பூணூல் அணிந்திருப்போம். அதை அணிந்தவர்கள் அசைவம் சாப்பிடுவது மரபுப்படி தவறு. மீறிச் சாப்பிட்டால் ஊரைவிட்டு குடும்பத்தைத் தள்ளி வைத்து விடுவார்கள்.

Nilgiri Tamil Nadu

நான் ஊரைவிட்டு வெளியே போய்தான் வேலை செய்து வருகிறேன். இன்ஃபோசிஸ் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். அங்கே கூட நான் அசைவம் சாப்பிட்டது இல்லை. எனக்கு அந்த வாசனையே பிடிக்காது. இதை அனைவருமே கடைப்பிடித்து வருகிறோம்" என்கிறார். இவரது கம்பெனி பெங்களூருவில் உள்ளது. ஆனால், அவர் கொரோனாவுக்கு பிறகு ஒர்க் ஃபிரம் ஹோம் எடுத்து வேலை செய்து வருகிறார். இவர் எப்படி சைவம் சாப்பிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாரோ அதைப்போலவே இனிவரும் காலத்தில் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளையும் அசைவம் சாப்பிட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்.

நிலவியல் ரீதியாக மலைக்கிராமத்தில் அதிக உஷ்ணம் இருக்காது. வீட்டுக்குள்ளாகவே மக்கள் அதிக காலம் முடங்கிக் கிடப்பார்கள். அதை மனதில் வைத்து பிற்காலத்தில் இந்த சைவ உணவு முறை வழக்கத்திற்கு வந்திருக்கலாம். இயற்கையாகவே மலைப்பகுதி என்பது தமிழ் இலக்கியத்தில் குறிஞ்சி நிலத்தில் வருவது. குறிஞ்சி நில மக்கள் வேட்டை சமூகமாக வாழ்ந்துள்ளனர். அவர்களின் உணவில் அசைவம் இருந்துள்ளது. இந்த சைவ முறை ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே கடைப்பிடித்து வருகிறார்கள். ஒட்டுமொத்த மலைவாழ் மக்களும் அசைவம் சாப்பிட மாட்டார்கள் எனச் சொல்ல முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+