ஊட்டியில் பெட்ரோல் பங்கில் பாருங்க.. பெரிய மாற்றம்! இ வாகன சார்ஜிங் வசதியால் நீலகிரி மக்களே ஹேப்பி
ஊட்டி: மின் வாகனங்களுக்கு தடையின்றி எளிதில், 'சார்ஜிங்' வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ.க்கு ஒன்று, மாநகரங்களில் ஒவ்வொரு, 3 கி.மீ.க்கு ஒன்று என்ற வீதத்தில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் இ-சார்ஜிங் வசதி, தற்போது சுற்றுலா தலங்களிலும் விரிவடைந்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.
உலகம் முழுவதுமே இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்தபடியே வருகிறது. அந்தவகையில், இந்தியாவிலும் நாட்டிலும், மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றன.

இ மின்சார வாகனங்கள்
அதேபோலவே, தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாட்டில், ஹைவேஸ்களில், இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அதாவது வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் வசதியை சுமார் 500 இடங்களில் அமைக்க பசுமை எரிசக்தி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1300 EV சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.. இதைத்தவிர, மேலும் 500 புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 க்குள் மத்திய அரசு நாடு முழுவதும் 1 லட்சம் பொதுச் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் பங்க் - சார்ஜிங் மையம்
தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில், அரசு, தனியார் பங்களிப்புடன், "ஹைஸ்பீடு சார்ஜிங்" மையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
தற்சமயம் நகரங்களின் பெரும்பாலான இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் காணப்பட்டு வரும் நிலையில், கூடிய சீக்கிரத்தில் நெடுஞ்சாலைகளிலும், கிராமப்புறங்களிலும் அதிக அளவில் நிறுவப்பட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
அந்தவகையில், சுற்றுலா தலங்களையும் மறந்துவிட முடியாது.. சுற்றுலா தலங்களிலும் இ-சார்ஜிங் செய்து கொள்வதற்கான அடிப்படை வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது... நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்ததது..
இ-சார்ஜிங் ஸ்டேஷன்
மின்சார வாகனங்களுக்கு போதுமான அளவு சார்ஜிங் நிலையங்கள் ஊட்டியில் இல்லை.. இது சுற்றுலா பயணிகளுக்கும் ஏமாற்றத்தை தந்து வந்ததுடன், எலக்ட்ரிக் வாகனங்களில் வரக்கூடியவர்கள் தங்களது வாகனங்களை சார்ஜ் செய்வதில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..
இந்நிலையில், தற்போது நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில் ஊட்டி சேரிங்கிராஸ் மற்றும் ஹில்பங்க் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பேங்குகளில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.. இதற்காக ரூ.12 லட்சம் மதிப்பில் 63 கேவிஏ திறன் கொண்ட 2 மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன..
மின்சார வாரியம் அதிரடி
இந்த நிகழ்வினை, மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி, செயற்பொறியாளர் சிவகுமார் மின்னூட்டம் செய்து துவக்கி வைத்தனர்.. மின்வாரிய அலுவலர்களும், ஊழியர்களும் இதில் பங்கேற்றனர்.. இதையடுத்து, பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர்கள் சார்ஜிங் மையங்கள் அமைக்க பெரிதும் ஆர்வம் காட்ட துவங்கிவிட்டார்களாம்.
முன்னதாக குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும்போது ஓவர்லோடு பிரச்சனை உள்ளிட் மின்குறைபாடுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க மின்வாரியம் சார்பில் மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications