நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா ஆள் அனுப்பியும்.. வேலைக்கு ஆகவில்லை.. தமிழகத்தில் "குயினை" பிடிக்க பாஜக படும்பாடு.. சிக்கல்

Google Oneindia Tamil News

ஊட்டி: தமிழகத்தில் முக்கியமான தொகுதி ஒன்றில் வேட்பாளரை நிறுத்த முடியாமல் பாஜக கடுமையாக திணறி வருகிறது.. இதற்கு பின் இருக்கும் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. 40 இடங்களை எதிர்பார்த்த நிலையில் பாஜகவிற்கு 20 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

இதில் பாஜக சார்பாக 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் 3 தொகுதிகளுக்கு பாஜக தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

மூன்று தொகுதிகள்

மூன்று தொகுதிகள்

விளவங்கோடு, உதகமண்டலம், தளி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இதில் தளி தொகுதிக்கு வேட்பாளர் ரெடி என்று தகவல்கள் வருகிறது. இன்னொரு பக்கம் விளவங்கோடு தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்.. பாஜக வேட்பாளரை அறிவித்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் உள்ளது.

ஊட்டி

ஊட்டி

இதில் மீதம் இருப்பது ஊட்டி மட்டும்தான். ஊட்டி தொகுதிக்கு நல்ல வேட்பாளரை அறிவிக்க முடியாமல் பாஜக திணறிக் கொண்டு இருக்கிறது. அங்கு பாஜக சார்பாக போட்டியிட 12 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இதில் யாரும் பாஜகவில் போட்டியிடும் அளவிற்கு வலிமை வாய்ந்தவர்களாகவோ, பிரபலமானவர்களாகவோ, அல்லது செலவு செய்யும் திறன் கொண்டவர்களாகவோ இல்லை.

மோசம்

மோசம்

இதனால் யாரை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு இடையிலேயே இதனால் கடுமையான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. ஊட்டி பாஜக நிர்வாகிகள் இடையே இதனால் பூசல் நிலவி வருகிறது. இங்கு சிட்டிங் எம்.எல்.ஏவான கணேஷ் காங்கிரசை சேர்ந்தவர். இங்கு காங்கிரஸ் கட்சி யாரை நிறுத்தினாலும் அவர் எளிதாக வெல்லும் அளவிற்கு ஊட்டி காங்கிரஸ் ஆதரவு கொண்ட தொகுதி.

ஆதரவு

ஆதரவு

இதனால் வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறுகிறது. இதற்காக டெல்லி மேலிடம் சில தேசிய உறுப்பினர்களை ஊட்டி அனுப்பியும் கூட எதுவும் நடக்கவில்லையாம் . அமித் ஷா சிலரை அனுப்பியும் கூட ஊட்டி வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது

மலைகள்

மலைகள்

மலைகளின் ராணியில் எப்படியாவது தாமரையை மலர வைக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இங்கு வேட்பாளரை தேர்வு செய்வதிலேயே நிறைய குழப்பம் நீடிக்கிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத போது இங்கு வேட்பளாரை தேர்வு செய்து எப்படி தேர்தலை சந்திப்போம் என்ற குழப்பத்தில் பாஜக இருக்கிறதாம்.

English summary
Tamilnadu Assembly Election: BJP is struggling to find a good candidate for Ooty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X