ஊட்டி அரசு கல்லூரியில் ‘பிரீ பையர்’ கேம்.. இறுதியில் எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாருங்க
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் 4 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தமிழ் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த 2 மாணவர் குழுக்கள் 'பிரீ பையர்' எனப்படும் ஆன்லைன் விளையாட்டை விளையாடி உள்ளனர். இதில் அவர்ககளுகுள் ஏற்பட்ட சண்டை எங்கே கொண்டுபோய் நிறுத்தியது தெரியுமா? 10 பேருடன் ஒரு குரூப்பும், மறுநாள், எதிர் தரப்பு ஆதராக ஒரு நபர் அரிவாளுடன் வந்துள்ளார். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி காலங்களில் ஏற்படும் மோதல், உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்காகவே பல நேரங்களில் நடக்கிறது. அந்த பெண்ணை சைட் அடிப்பது யார், யார் கெத்தாக இருப்பது, ராகிங் செய்வது, யார் தல என்பது போல் சண்டை என ஒன்றுக்கும் உதவாத சண்டையாகவே இருக்கும். அதேபோல் அழகான பெண்ணை காதலிப்பது யார் என்பதிலும் சில நேரங்களில் சண்டை வருவது உண்டு. சிலர் போதைப்பழக்கங்கள் காரணமாகவும் சண்டை போடுவது உண்டு. ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் 'பிரீ பையர்' விளையாட்டு காரணமாக சண்டை வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகள் 4 ஆயிரம் பேர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் தமிழ் துறை 2-ம் ஆண்டு படித்து வந்த 2 மாணவர் குழுக்கள் 'பிரி பையர்' எனப்படும் ஆன்லைன் விளையாட்டை விளையாடியிருக்கிறார்கள். ஆன்லைன் கேமில் தாக்குவது, துப்பாக்கியால் தொடர்ந்து சுடுவது என குழுவாக கேம் விளையாடி உள்ளனர். அப்போது தகாத வார்த்தை பேசியதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது சண்டையாக மாறியது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவருக்கு ஆதரவாக காந்தல் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று 10 நபர்களுடன் கல்லூரிக்கு வந்து, மதுரை மாவட்டத்தை சேர்ந்த 2-ம் ஆண்டு படிக்கும் மாணவரிடம் தகராறு செய்தார்களாம். இதனால் பயந்து போன அந்த மாணவர், ஊட்டியில் உள்ள பெயிண்டரான தனது சகோதரருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெயிண்டர் அரிவாளுடன் கல்லூரி நுழைவுவாயில் முன்பு வந்து உள்ளார். இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் சாம் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, அருகில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தகவல் அறிந்த ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அரிவாளுடன் அங்கு வந்த நபர், போலீசாரை பார்த்ததும் தப்பியோடி விட்டார். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications