பாஜகவை "டோட்டலா" காலி செய்துட்டாரு.. அதிமுகவும் முழிக்குது! நீலகிரியில் ஆ.ராசா நடத்திய "புதிய சாதனை"

15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.. மக்களவைக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. திமுகவின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக இருப்பவர்.. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராகவும் அலங்கரிப்பவர். அனைத்தையும்விட முக்கியமாக மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஆதரவையும், அபிமானத்தையும் அதிகமாகவே பெற்றவர்.
நீலகிரி: இந்த முறையும் நீலகிரி தொகுதியே ஆ.ராசாவுக்கு ஒதுக்கப்பட்டது.. அதிமுக,பாஜக இரண்டு கட்சிகளுமே தனித்தனியாக களம் கண்டது, ஆ.ராசாவுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாகிவிட்டது.
பாஜக வேட்பாளர் எல்.முருகன், நீலகிரியில் போட்டியிட கடந்த 2 வருடமாகவே ஆசைப்பட்டு வருவது தெரிந்தும், தன்மீதான வெற்றியில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார் ஆ.ராசா. அதுமட்டுமல்ல, பாஜக, அதிமுக வேட்பாளர்களைவிட, ஆ.ராசா சீனியர் ஆவார்.. கள அனுபவங்களை பலமுறை நேரடியாக பெற்றவரும் ஆவார்.. இதெல்லாம் கூடுதல் சாதகமாக அவருக்கு அமைந்துவிட்டது.
போட்டி: அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயகுமார் உட்பட 16 பேர் வேட்பாளர்கள் களமிறங்கினார்கள்.. ஆனால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றி பெற்றிருக்கிறார்.. அதாவது, மொத்தம் பதிவாகிய 10 லட்சத்து 16 ஆயிரத்து 318 வாக்குகளில் 46.45 சதவீத வாக்குகளை ஆ.ராசா பெற்றிருக்கிறார்.
சபாஷ்: அந்தவகையில், கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசமான 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகளை கடந்துள்ளதுடன், 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.. நீலகிரி தொகுதி வரலாற்றில் இதுவே அதிகபட்ச வாக்கு வித்தியாசமாகும். அந்தவகையில், மீண்டும் டெல்லி செல்கிறார் திமுகவின் ஆ.ராசா
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications