நீலகிரி மாவட்டத்தில் கூட்டு பட்டா பிரச்சினை.. ஏழைகளுக்கு இலவச பட்டா.. வருவாய் அலுவலர் 2 குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கூறினார். நீலகிரி மாவட்டத்தில் கூட்டு பட்டா பிரச்சினை உள்ளது என்றும் இதற்கு தீர்வு காண்பதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளோம் என்றும் இத்திட்டம் வெற்றி பெற்றால், நீண்ட காலமாக நிலவும் கூட்டு பட்டா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று வருவாய் அலுவலர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் பசலி 1434-க்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. குன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ஊட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

patta Nilgiris

நீலகிரி மாவட்டத்தில் கூட்டு பட்டா பிரச்சினை இருக்கிறது என்றும் இதற்கு தீர்வு காண்பதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளதாகவும், இத்திட்டம் வெற்றி பெற்றால், நீண்ட காலமாக நிலவும் கூட்டு பட்டா பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் வருவாய் அலுவலர் நாராயணன் கூறினார்.

அதேநேரம் நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை வீட்டுமனை பட்டா வழங்க தடை உள்ளது என்றும் இதனால் பட்டா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பட்டா வழங்க முடிவதில்லை என்றும் நீண்ட காலத்திற்கு பின் விலக்கு பெற்று பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

இதேபோல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, அரசு நிலங்களில் குடியிருப்போருக்கும் பட்டா வழங்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிசீலனை செய்யப்பட்டிருப்பதாக கூறிய வருவாய் அலுவலர், அரசு அனுமதிக்கும் பட்சத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+