துள்ளி குதிக்கிறாள் "மலைகளின் ராணி".. மே 20-ல் ஊட்டி மலர் கண்காட்சி நடக்கிறது.. வெளியானது அறிவிப்பு
ஊட்டியில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளதால், மலைகளின் அரசி துள்ளி குதித்து வருகிறாள்..!
ஏப்ரல், மே மாதத்தில் சமவெளிப்பகுதிகளில் வெயில் மண்டையை பிளக்கும்.. நெருப்பை அள்ளிக் கொட்டும் அந்த அனலில் இருந்து, சில நாட்களாவது குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம்.
வெளியூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, பிற மாநிலங்களான கேரளா, கர்நாடாவில் இருந்தும் நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து போவார்கள்...

மலர்க்கண்காட்சி
இப்படி ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காகவே, வருடந்தோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி, படகு அலங்காரம், குன்னூரில் பழக் கண்காட்சி, உட்பட கோடை விழாக்கள் நடத்தப்பட்டும் வருகின்றன.. இதில், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சி மட்டும் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

கண்காட்சி
இந்த மலர் கண்காட்சி மிகவும் பிரபலமானது.. இந்த மலர்க்கண்காட்சியை தமிழக ஆளுநர்தான் வருடா வருடம் துவக்கி வைப்பார்.. கண்காட்சிக்காகவே பிரத்யேகமாக வெளிநாடுகளில் இருந்துகூட பயணிகள் வருவார்கள்.. எப்படியும் அந்த ஒருநாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோராவது வந்துவிடுவார்கள்.. வழக்கமாக, மே மாதம் 2-ம்வாரத்தில்தான் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்... ஆனால், கடந்த 2 வருடங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கோடை விழா நடத்தப்படவில்லை..

மலர்கள்
இதனால், சீசனுக்காகவே பயிரிடப்பட்டிருந்த விதவிதமான மலர்கள், செடியிலேயே பூத்து வாடி போயின. இந்த சீசனை மட்டுமே நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டது.. ஊட்டியை பொறுத்தவரை சுற்றுலாதலம் என்பதால், ஹோட்டல்கள், காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள் போன்றவைகளை மூடியே வைத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது..

ஆலோசனை கூட்டம்
தற்போது கொரோனா பாதிப்பு தற்போது முற்றிலும் குறைந்து காணப்படும் நிலையில், மலர் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சில நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது.. அதன்படியே இந்தாண்டு 124-வது மலர் கண்காட்சி நடக்க உள்ளது.. அதற்கான ஆலோசனை கூட்டமும் தோட்டக்கலைத்துறை ஆணையர் பிருந்தா தேவி தலைமையில் ஊட்டியில் இன்று நடந்தது.. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்( பொ) சிபிலா மேரி, நகராட்சி ஆணையர் காந்திராஜ் உட்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பூங்கா
கூட்டத்தின் இறுதியில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. அதன்படி, மலர் கண்காட்சி வரும் மே 20ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 7,8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 11வது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது... மே 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கூடலூரில் 9வது வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது.. மே 14, 15 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நடக்க உள்ளது..

தேதிகள் அறிவிப்பு
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124வது மலர் கண்காட்சி மே மாதம் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. மே 28, 29 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி நடக்கிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்ண வண்ண பூக்கள்
முன்கூட்டியே இப்படி மலர் கண்காட்சி நடக்கும் தேதிகள் தெரிந்தால்தான், அதற்கு ஏற்றார்போல் ரயில், விமானம் மற்றும் சொகுசு பஸ்களில் டிக்கெட்டுகளை ரிசர்வேஷன் செய்ய முடியும்.. அதேபோல, லாட்ஜ், தங்கும் காட்டேஜ்கள் போன்றவைகளையும் புக்கிங் செய்ய முடியும்.. தற்போது இந்த தேதிகள் வெளியாகி உள்ளதால், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தேதி அறிவிப்பு
பயணத்துக்கான ஏற்பாடுகளில் தயாராகி விட்டனர்.. அதேபோல, 2 வருடமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நீலகிரியின் நடைபாதை மற்றும் சிறுகுறு வியாபாரிகளும் மிகுந்த நம்பிக்கையில் இந்த கோடை விழாவை எதிர்பார்த்துள்ளனர்.. எல்லாவற்றிற்கும் மேலாக, 2 வருடங்களாக ஏங்கி தவித்த வண்ண வண்ண பூக்கள், சுற்றுலா பயணிகளை வரவேற்க, இன்முகத்துடன் காத்து கொண்டிருக்கின்றன..!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications