Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துண்டிக்கப்பட்ட யானைகள் வழித்தடம்.. நீலகிரியில் விடுதிகளை இடித்து அகற்ற அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை அதன் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் குளுகுளு கால நிலையும், பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற அதன் இயற்கை கொஞ்சும் அழகும்தான். நீலகிரிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்து, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேரந்த மக்களும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தின் மற்றொரு சிறப்பு மலை ரயில்.

Nilgiri Hotels


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் அலாதியான அனுபவம் கிடைக்கும். இந்த மலை ரயில் பயணத்துக்கும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில் பிரதானமாக உள்ளதால் மாவட்டம் முழுவதும் பயணிகள் வசதிக்காக ஏராளமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு விடுதிகள் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. யானைகள் வழித்தடம் துண்டிக்கப்பட்டு இந்த விடுதிகள் கட்டப்படுவதால் மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதாகவும், இதனால் மனிதர்கள், விலங்குகளிடையே உயிர்ச் சேதம் ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடங்களை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், யானைகள் வழித்தடம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பட்டா நிலங்களை காலி செய்ய வேண்டும் என 2011 ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது யானை வழித்தடத்தில் உள்ள 38 தங்கும் விடுதிகளை மூடி 'சீல்' வைக்க 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, 38 விடுதிகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது. யானை வழித்தட வழக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக வனத்துறை நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக விடுதி உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகள், அதன் உரிமையாளர்கள், பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குடியிருப்புக்கான உரிமத்தைப் பெற்று தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை இடிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.

விசாரணைக் குழுவின் உத்தரவுப்படி மசினக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தங்கும் விடுதிகள், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் பதிவு தபால் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+