எல்.முருகன் Vs ஆ.ராசா! குளுகுளு ஊட்டியில் தகிக்கும் அரசியல் அனல்! லோக்சபா தேர்தல் பணிகள் விறுவிறு!
நீலகிரி: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத்தால் நீலகிரி தொகுதியில் தேர்தல் பணிகளை சத்தமின்றி ஆரம்பித்துவிட்டார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை களம் இறக்கும் திட்டத்தில் இருக்கிறது பாஜக தேசியத் தலைமை. இதன் காரணமாக தான் எல்.முருகன் நீலகிரிக்கு அடிக்கடி விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல அண்மையில் குன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த தகவலை பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றவரும் இவர் தான்..
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிப்பட்ட கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்திய போது அதில் எல்.முருகனும் ஆர்வமுடன் கலந்துகொண்டார். எப்போதும் இல்லாத வகையில் கடந்த 6 மாதங்களாக நீலகிரியில் அடிக்கடி முகாமிடும் முருகன், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இதை வைத்து பார்க்கும் போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசாவை எதிர்த்து எல்.முருகன் போட்டியிடுவது உறுதியாகி விட்டதை உணர்த்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பல்வேறு வழிகளில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் குடைச்சல் கொடுத்தவர் ஆ.ராசா. அதேபோல் பொதுக்கூட்டங்களிலும் பாஜகவை இவரை போல் யாரும் வறுத்தெடுக்க முடியாது. இதனால் ஆ.ராசாவை நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த கங்கணம் கட்டிக்கொண்டு காரியம் ஆற்றி வருகிறது பாஜக.
இதனிடையே எல்.முருகனை நேருக்கு நேர் தேர்தலில் மோதி பார்த்துவிடலாம் என்ற சவாலுடன் வலம் வருகிறார் ஆ.ராசா. நீலகிரி மக்களவைத் தொகுதி முழுவதும் இப்போது தொடர்ந்து விசிட் அடித்து வரும் அவர் திமுகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை சரி செய்து அவர்களை மீண்டும் தேர்தல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட வைப்பதற்கான வேலைகளை கவனித்து வருகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications