"நம்பர் 1".. அசத்தல்.. கெத்து காட்டும் திவ்யா.. எகிறி அடிக்கும் ஊட்டி.. இந்தியாவிலேயே 100% தடுப்பூசி
100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதில் முதல் மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது
ஊட்டி: இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்களில் முழுமையான 100 சதவீதத்தை எட்டியது தமிழகத்தில் உள்ள உதகைதான் என்றும், இங்குள்ள 5 லட்சத்து 16 ஆயிரம் பேர் கோவிட் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த வருடம் நீலகிரியையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.. காரணம், ஒரு பக்கம் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா, என மூன்று மாநில எல்லைகளையும் கொண்டது இந்த மலை மாவட்டம்...
இதனால், எல்லைகள் அனைத்துமே இழுத்து மூடப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
எனினும், கோயம்பேட்டில் இருந்து லாரிகள், காய்கறிகளை கொண்டு செல்வதாலும், இறக்குமதி செய்வதாலும் தொற்று எப்படியோ நுழைந்துவிட்டது...

நீலகிரி
கடைசி வரை போராடி, மற்ற மாவட்டங்களையும்விட "பச்சை மண்டலத்துக்கு" முதலிடத்துக்கு மிக வேகமாக முன்னேறியது நீலகிரி. இதற்கு காரணம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாதான்... இதற்கு பிறகு 2வது அலை பரவ தொடங்கியதும், மறுபடியும் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது.. சென்னையைவிட கோவை உட்பட கொங்கு பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் இன்னொரு தீவிரத்தை மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்தது.

மாஸ்க்
2 மாதங்களுக்கு முன்புவரை ஒருநாளைக்கு 40 முதல் 80 வரை கேஸ்கள் வந்து கொண்டிருந்தது என்றாலும், பொது மக்கள் அனைவரும் மாஸ்க் போட வேண்டும் என்று கட்டாயம் போடப்பட்டுள்ளது. அப்படி யாராவது மாஸ்க் போடாவிட்டாலும் 200 ரூபாய் ஸ்பாட் ஃபைன் போடப்பட்டது.. தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.. அடுத்த சில தினங்களிலேயே, தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம்தான், கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை மாவட்டமாக திகழ தொடங்கியது.

நீலகிரி
இதற்கு அடுத்தபடியே இன்னொரு சாதனையை நீலகிரி நிகழ்த்தியது.. இந்த மாவட்டத்தில் நிறைய பழங்குடியினர் வசித்து வருகிறார்கள்.. நிறைய குட்டி குட்டி கிராமங்களும் உள்ளன.. இந்த கிராமங்கள் எல்லாம் தொலை தூரத்தில் உள்ளன.. இங்கு எளிதாக யாராலும் சென்று வர முடியாது... இப்படிப்பட்ட இடங்களிலும் மக்களை தேடி பிடித்து, தடுப்பூசி செலுத்தும் முயற்சியைதான் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கையில் எடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து, அடுத்த சில நாட்களில், இந்தியாவிலேயே அனைத்து பழங்குடியின மக்களும் வேக்சின் போட்டுக்கொண்ட ஒரே மாவட்டமாக நீலகிரி கெத்து காட்டியது.. இந்தியாவில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இப்படி ஒரு சிறப்பு கிடைக்கவில்லை.. இதனால், அப்பகுதி பழங்குடியின மக்கள் பாதுகாப்பதோடு அவர்களின் இனம் நீட்சி அடையவும் வழி ஏற்பட்டது.. அதுமட்டுமல்ல, திவ்யாவின் இந்த பணியை பாராட்டி, முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, சான்றிதழையும் வழங்கியிருந்தார்.

நீலகிரி
இப்போது 3வது முறையாக இன்னொரு சாதனையை நிகழ்த்தி உள்ளது நீலகிரி.. நீலகிரியில் மொத்தம் 7 லட்சத்து 21 ஆயிரத்து 949 மக்கள் தொகை உள்ள நிலையில், 18 வயதுக்கு மேல் 6 லட்சத்து 42 ஆயிரத்து 132 பேர் உள்ளனர்.. நேற்றைய தினம் தொற்று பாதிப்பு என்று எடுத்து கொண்டால் 33 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது.. இப்போதைக்கு சிகிச்சையில் 314 பேர் உள்ளனர்..

அறிவிப்பு
தடுப்பூசி செலுத்தாதவர்களை தேடி பிடித்து செலுத்தும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்து வந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு மேலும் பலனை ஈட்டி தந்தது.. தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை இல்லை என்று கலெக்டர் திவ்யா அறிவித்ததுமே, மேலும் பலர் தானாகவே தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள முன்வந்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர்
இந்நிலையில்தான் இன்னொரு சாதனையை நீலகிரி மாவட்டம் நிகழ்த்தி உள்ளது.. இந்தியா முழுவதும் உள்ள 754 மாவட்டங்களில் 100% தடுப்பூசி போட்ட மாவட்டம் என்ற இலக்கை தமிழகத்தில் உள்ள உதகை முதலிடம் பிடித்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனே நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.. செய்தியாளர்களிடம் அவர் சொல்லும்போது, "தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டோம்...

முதலிடம்
இதுவரை மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரம் பேர் என்ற இலக்கை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 754 மாவட்டங்களில் 100% தடுப்பூசி போட்ட மாவட்டம் என்ற இலக்கை தமிழகத்தில் உள்ள உதகை முதலிடம் பிடித்துள்ளது என்றார்.. அதுமட்டுமல்ல, சிறப்பு தடுப்பூசி முகாமில் 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கேரளா
இதற்காக மாவட்ட நிர்வாகத்தை கலெக்டர் திவ்யா முடுக்கிவிட்டுள்ளார்.. இந்த இலக்கை எட்டுவதற்காக, 295 தடுப்பூசி மையங்கள் மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... கிராமப்புற பகுதிகளில் 184 மையங்களும், பேரூராட்சி பகுதிகளில் 72 மையங்களும், நகராட்சி பகுதிகளில் 39 மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களும் கேரள மாநிலத்துக்கு அருகில் உள்ளதால், இந்த இரு மாவட்டங்களின்மீதும் கூடுதல் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications