மனைவி எடுத்த முடிவு.. கோத்தகிரி அருகே உயிரை விட்ட சப்-இன்ஸ்பெக்டர்.. நீலகிரியில் சோகம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஜராஜன், வீட்டில் தனியாக இருந்த நிலையில், விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி தூனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன் மற்றும் சீதையம்மாள் தம்பதியின் மகன் போஜராஜன். இவருக்கு 49 வயது ஆகிறது. போஜராஜன் கடந்த 1994-ம் ஆண்டு முதல் காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று சப்-இன்ஸ்பெக்டராக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் பணியாற்றினார்.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் தூனேரி கிராமத்தில் போஜராஜன் வசித்து வந்தார். மனைவியை பிரிந்த வருத்தத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த காரணத்தால் அவர், கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்திருக்கிறார்.
நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு அவரது பெற்றோர் கோத்தகிரிக்கு சென்றுவிட்டனர். போஜராஜன் வீட்டில் இருந்தார். அவரின் பெற்றோர் தங்களது பணியை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது தனது மகன் போஜராஜன் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே போஜராஜன் இறந்து விட்டதை தெரிவித்தனர். இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஊட்டியில் காவலராக வேலை செய்து வந்த கண்னன் என்பவர் தற்கொலை செய்திருந்தார். அதற்குள் இன்னொரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மஞ்சூர் அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவரும், ஊட்டியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்த 25 வயதாகும் கண்ணன் என்பவர், கணவனை பிரிந்த பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் திருமணம் செய்ய மறுத்ததால், இளம் பெண் சசிகலா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்த போலீஸ்காரர் கண்ணனை திருமணமான மறுநாளே போலீஸ் இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த காவலர் கண்ணன், மனைவி குடும்பம் நடத்த வராமல் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்..
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications