சீட் பிடிக்க எதை தூக்கி போடுறாங்க பாருங்க.. குன்னூரில் ஒரு குபீர் சம்பவம்!
பஸ்ஸில் இடம் பிடிக்க துப்பாக்கியை போட்ட போலீஸ்காரரின் வீடியோ வைரலாகிறது.
குன்னூர்: வடிவேலு படத்தில் பஸ்ஸில் சீட் பிடிக்க பாம்பு போடற மாதிரி குன்னூரிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. தீபாவளி நெருங்கிவிட்டதால் தமிழகம் முழுக்க பஸ், ரயில் என எல்லா இடங்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளுகிறது. இங்கே மட்டும் இல்லாது நகை கடை, துணி கடை, பட்டாசு கடை என எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படித்தான் நேற்று குன்னூர் பஸ் ஸ்டாண்டிலும் ஒரே கூட்டம். அப்போது 2 போலீஸ்காரர்கள் முள்ளிகூர் என்ற இடத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த பஸ் வந்து நின்றாலும் ஓடிப்போய் மக்கள் முண்டியடித்து கொண்டு ஏறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் இவர்கள் 2 பேரால் ஏறவே முடியவில்லை.

மற்றவர்கள் எல்லோரும் பஸ் வந்து நிக்கவும் கையில் இருக்கும் துண்டு, பைகளை ஜன்னல் வழியாக போட்டு சீட் பிடித்தனர். ஆனால் 2 போலீஸ்காரர்களிடம் கையில் துண்டும் இல்லை... பையும் இல்லை... இருவரின் கையில் இருந்ததோ வெறும் முழு நீள துப்பாக்கிதான். பாதுகாப்புக்காக பணிக்காக கையில் வைத்திருந்தார்கள்.
[மாரிமுத்தாள் கேட்டு இல்லைன்னு சொல்வதா.. நோ... நகை கடையே லவட்டிக் கொண்டு போன கணேசன்!]
அதனால் பொறுத்து பொறுத்து பார்த்த போலீஸ்காரர் ஒருவர், பஸ் ஒன்று வந்து நின்றதும் ஓடிச்சென்று தனது துப்பாக்கையை ஜன்னல் வழியாக போட்டார். இதை பார்த்ததும் அவர் பக்கத்தில் முண்டியடித்து கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சீட் பிடிக்க பிஸ்டலை தூக்கி போடவும்எல்லோருமே அதிர்ச்சி அடைந்தார்கள். போலீஸ்காரர் பஸ்சில் இடம் பிடிக்க துப்பாக்கி போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications