Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தன்ஜி சபாஷ்... ஊட்டி வரை "ஊட்டி" வளர்த்த ரத்தன் டாடா.. நீலகிரியின் பழைய பங்களாவும், அந்த பாசமும்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ரத்தன் டாடாவின் இழப்பால், கண்ணீர் சொரிந்து நிற்கிறாள் மலைகளின் ராணி.. ரத்தன் டாடாவின் ஈரம் தங்கிய நினைவுகளால், கடந்த 2 நாட்களாகவே நீலமலை வாடி வதங்கி காணப்படுகிறது.. அந்த அளவுக்கு ரத்தன் டாடாவுக்கு ஊட்டி வரை பந்தம் தொடர்ந்துள்ளது.. அது என்ன தெரியுமா?

"தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்" என்பதுதான் அந்த பழமையான கட்டிடத்தின் பெயர்.. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெருமையை சொல்மரபை போற்றி கொண்டிருக்கிறது இந்த பழமையான கட்டிடம்.. ஊட்டியின் மிகப்பெரிய கம்பீர அடையாளமாகவும் திகழ்கிறது இந்த பழமையான கட்டிடம்.

ratan tata ooty nilgiris

இதுகுறித்து நீலகிரி ஆவணக்காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் அவர்களை "ஒன் இந்தியா" தமிழ் சார்பாக சந்தித்து பேசினோம்.. ரத்தன் டாடாவுக்கும், ஊட்டிக்கும் உள்ள உறவு என்ன? என்பதை பற்றி அவரிடம் நாம் கேட்டோம். நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்காக வேணுகோபால் நம்மிடையே பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

தொழிலதிபர்: "மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தாத்தா பெயர் சர் ரத்தன் டாடா... அவர் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் 2-வது மகன் ஆவார்..

கலைகளின் மீது பிரியம் கொண்டவர் சர் ரத்தன்ஜி... மிகப்பெரிய சமூக ஆர்வலர்.. பிறருக்கு அள்ளி கொடுப்பதில் மன்னன். நம்முடைய இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் நிறைய பேருக்கு நன்கொடைகளை அள்ளி வழங்கியவர்.

சர் ரத்தன்ஜியின் மனைவி பெயர் நவாஜ்பாய் (ரத்தன் டாடாவின் பாட்டி).. 1900-ம் ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவிலுள்ள அத்தனை ராஜாக்களுக்கும், இளவரசர்களுக்கும், ஊட்டி மீது ஒரு கண் இருந்தது. நாட்டிலுள்ள அத்தனை பணக்காரர்களும் ஊட்டியில் பங்களா வாங்கி வைத்திருப்பது அந்த காலத்தில் கவுரத்தின் அடையாளமாக இருந்தது..

கவுரவ அடையாளம்: பரோடா மகாராஜா, மைசூர் மகாராஜா, போர்பந்தர் மகாராஜா என இந்தியாவின் 16 இளவரசர்கள் ஊட்டியில் நிறைய பங்களாக்களை அப்போது சொந்தமாக வாங்கி வைத்திருந்தார்கள்.. அதுபோல, ரத்தன்ஜிக்குக்கும் ஊட்டியில் ஒரு பங்களா வாங்க ஆசைப்பட்டார்.. அப்போதுதான்

பங்களா பெயர்: HARROW ON THE HILL என்ற பழமையான பங்களா ரத்தன்ஜி கண்ணில் படுகிறது. இந்த பங்களா 1840-க்கு முன்பே 8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் ஒரு பிரிட்டிஷ் பெண்மணி கங்லீப் என்பவர் ஆவார்... இவர் மிகப்பெரிய செல்வந்தவர்.. HARROW ON THE HILL என்ற பெயரில் லண்டனில் நிறைய பங்களாவை கட்டி வைத்திருக்கிறார். அந்த பெயரிலேயே ஊட்டி பங்களாவையும் கட்டி வைத்திருந்தார்.

இந்த பங்களாவை 1900-ம் காலகட்டத்தில் ரத்தன்ஜி விலைக்கு வாங்குகிறார். தன்னுடைய மனைவியுடன் இந்த பங்களாவில் குடியேறுகிறார்.. ஆனால், 1915-ம் ஆண்டில் ரத்தன்ஜிக்கு திடீரென உடம்பு சரியில்லால் போய்விடுகிறது.. அதனால், லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றவர், அதோடு இறந்துவிடுகிறார்.

மறைவு: ரத்தன்ஜி மறைவுக்கு பிறகு நவாஜ்பாய், "சர் ரத்தன் டாடா அறக்கட்டளையை" நீலகிரியில் துவங்கி நடத்துகிறார்.. 1922-ம் ஆண்டு, மும்பைக்கே சென்றுவிட முடிவு செய்கிறார்.

அந்த நேரத்தில் லேடி வெலிங்டன். நவாஜ்பாயிடம் வந்து, நீங்கள் மும்பை சென்றுவிட்டால், இந்த பங்களா சும்மாதானே இருக்க போகுது? அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை தரக்கூடிய இடமாக இதனை பயன்படுத்தி கொள்ளட்டுமே? என்று அனுமதி கேட்கிறார்.

பங்களா: நவாஜ்பாயியும் இதற்கு சம்மதம் சொல்லி, பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகளுக்கு அந்த பங்களாவை நன்கொடையாக வழங்கினார்.. இது ராணுவம், கடற்படை அதிகாரிகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அதிகாரிகளுக்கான "கன்வல்சென்ட் ஹோம்" என்று பெயரிடப்பட்டது. மேலும், வீரர்கள் தங்குவதற்கு 19 இரட்டை படுக்கை அறைகள் கொண்ட பங்களாவாக இதை பிரிட்டிஷ் அரசு விரிவுபடுத்தியது. அதில் 2 அறைகள், ஒரு பெரிய சாப்பாட்டுக் கூடம், சமையல்காரர் வீடு, ஸ்டோர் அறைகள் மற்றும் 43 வேலையாள் குடியிருப்புகள் உள்ளன.

சுதந்திரத்துக்குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா, லேடி நவாஜ்பாய் டாடாவை அணுகி, அந்த சொத்தை இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் விடுமுறை இல்லமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கும் நவாஜ்பாய் ஒப்புதல் அளித்தார்.

கண்டிஷன்: ஆனால், ஒரே ஒரு நிபந்தனையை விதித்தார்.. HARROW ON THE HILL என்ற பங்களாவின் பெயருக்கு பதிலாக, "ரத்தன் டாடா சிகிச்சை மையம்" என்று புதிதாக பெயரை மாற்ற வேண்டும் என்கிறார். அதன்படியே "தி ரத்தன் டாடா ஆபீசர்ஸ் ஹாலிடே ஹோம்" என்று பெயர் மாற்றப்பட்டது.. இது வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது... இந்த சொத்து பழைய உதகையின் அடையாளங்களில் ஒன்றாக இன்னமும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நாடு விடுதலை அடைந்து பிரிட்டிஷ் ராணுவத்தினர் இந்தியாவைவிட்டு சென்றபிறகும்கூட, நம்முடைய இந்திய ராணுவ வீரர்களுக்காகவும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காகவும், சிகிச்சை தரும் இடமாக இந்த பங்களா உதவியது.

ரத்தன்ஜியை பொறுத்தவரை, ஊட்டியில் குறுகிய காலமே தங்கியிருந்தார். ஆனால், நீலகிரி மக்களுக்கு இவர் அப்போது செய்த நன்மைகள் ஏராளம்.. முதன்முதலில் மும்பையில் மின்சாரத்தை கொண்டு வந்தவர் ரத்தன்ஜி.. அதுபோலவே நீலகிரிக்கும் 1923ம் ஆண்டு மின்சாரத்தை கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.. அதேபோல சிறிய ரக விமானத்தை நீலகிரியில் நிர்மாணிக்கவும் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார்.. ஆனால் அதற்குள் அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது.

பேரன் ரத்தன் டாடா: இதற்கு பிறகு அவரது பேரன் ரத்தன் டாடா, தன்னுடைய தாத்தா, பாட்டியின் விருப்பப்படியே, அறக்கட்டளை பணிகளை நீலகிரியில் தொடர்ந்துள்ளார்.. 100 வருடங்களுக்கு முன்பு ரத்தன்ஜி செய்த நன்றியை, நீலகிரி மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்" என்று நம்மிடம் நன்றியுடன் நினைவுகூர்ந்து பகிர்ந்து கொண்டார் வேணுகோபால்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+