அந்த 3 பேருமே.. அதிர்ச்சி வாக்குமூலம்.. கொடநாடு வழக்கு வரும் 1ந் தேதிக்கு ஒத்திவைப்பு.. பரபரப்பு
கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.. இந்த வழக்கு தொடர்பாக மேலும் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கை அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்து வருகிறது.. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்...
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கோர்ட்டில் அனுமதி பெற்று கடந்த 17-ந் தேதி சயானிடம் போலீசார் விசாரணை நடத்தினர்..

விசாரணை
அப்போது இந்த கொலை, கொள்ளை வழக்கில் அதிமுகவின் முக்கிய நபர்களுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்ததாக சயான் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது... அந்த வாக்குமூலத்தை போலீசார் ரகசியமாக பதிவு செய்து வைத்து கொண்டனர்.. அதில் சில தலைவர்களின் பெயரையும் சயான் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

வாக்குமூலம்
இதற்கு பிறகு, சாலைவிபத்தில் இறந்ததாக கூறப்பட்ட கனகராஜ் என்பவரின் அண்ணன் தனபாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்... அவர் அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து வைத்து கொண்டனர்.. மேலும் இந்த சம்பவம் நடந்த நாளில் கோத்தகிரி, கெரடாமட்டம், கோடநாடு, கூடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.

அறிக்கை
இந்த விசாரணை அறிக்கைகள் அத்தனையையும், ஊட்டி கோர்ட்டில் கடந்த 27-ந் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது... இதை தொடர்ந்து கோடநாடு வழக்கும் 2-ம்தேதி, அதாவது இன்றைய தினம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பரபரப்பு
அதன்படியே இன்றைய தினம் ஊட்டி கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.. இதனால் கோர்ட் வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.. மேலும், கோடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், நாளைய தினம் விசாரணை நடக்க உள்ளது.. அதுபோலவே, தடயவியல் நிபுணர் ராஜ்மோகனிடமும், மின்வாரிய உதவி பொறியாளரிடமும் நாளை மறுநாள் அதாவது சனிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.

சிக்கல்
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.. சயானும் அதிமுகவின் மேலிட தலைவர்கள் சிலரை பற்றி வாக்குமூலத்தில் தெரிவித்திருந்ததால், அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.. சட்டப்பேரவையில் இது தொடர்பான பிரச்சனையை காங்கிரஸ் கட்சி கிளப்பி இருந்தது.. அப்போதிருந்தே அதிமுக தலைமை கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது..

கொடநாடு
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி அவைக்கு சரியாக வராமல் உள்ளார்.. கொடநாடு பிரச்சனையை பேரவையில் கிளப்பிய பிறகு, வெளிநடப்பு உட்பட தர்ணாவரை செய்திருந்தார்.. அதற்கு பிறகு பேரவையில் பங்கெடுக்காமல், தன்னுடைய நிர்வாகிகளிடமும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் இன்றைய தினம் கொடநாடு வழக்கு, விசாரணைக்கு வரஇருந்தநிலையில், மேலும் கலக்கத்தை அக்கட்சியில் ஏற்படுத்தி உள்ளது.

அவகாசம்
வழக்கு விசாரணைக்கு ஆஜராக சயான் ஊட்டி கோர்ட்டுக்கு வந்திருந்தார். குன்னூர் சிறையில் உள்ள வாளையாறு மனோஜும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அரசு தரப்பில் அதேபோல, வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும், எதிர்தரப்பை சேர்ந்த வக்கீல்களும் ஆஜராகி இருந்தனர். விசாரணை தொடங்கியதும் அரசு தரப்பில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

தள்ளிவைப்பு
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா இந்த வழக்கை அடுத்த மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்... இன்று கோர்ட்டில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், மின்வாரிய உதவி பொறியாளர் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இன்று ஆஜராகவில்லை.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications