காவல்துறையில் ’கருப்பு ஆடு’! போலீஸ் ஸ்டேஷனில் கதறிய பெண் காவலர்! எஸ்எஸ்ஐ-யை கொத்தாக தூக்கிய போலீஸ்!
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் பணியில் இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல் நிலையத்திலேயே காவலர் அத்துமீறிய சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
குறிப்பாக பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக சாட்டப்படுகிறது.

அதிர்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது பணியில் இருந்த பெண் காவலரை அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு ஆய்வாளர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தமிழக காவல்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குன்னூர் காவல் நிலையம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மேல் குன்னூர் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது அதே காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் 39 வயதான சரவணன் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து அலறி அடித்து வெளியே ஓடிய அந்த பெண் காவலர் இது தொடர்பாக தான் பணியாற்றும் காவல் நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி காவல் ஆய்வாளர் சரவணன் மாஞ்சூருக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார். ஆனால் சரவணன் மீதான நடவடிக்கை போதாது எனவும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பெண் காவலர் கூறியுள்ளார்.

அதிரடி கைதி
தொடர்ந்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு புகார் அளித்த நிலையில் இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது. அடுத்து தற்போது மேல் குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலருக்கு அதே காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமும் நீலகிரி மாவட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications