ஒரே இரவில் போட்ட பக்கா பிளான்.. கூனிக்குறுகிய கூடலூரில் தாசில்தார் ராஜேஸ்வரி.. அதிரும் நீலகிரி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டரை கோடி ரூபாய் சொத்து உள்ள நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டமூலா பகுதியை சேர்ந்த 34 வயதாகும் உம்மு சல்மா பட்டதாரி ஆவார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் இருக்கிறது இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு உம்மு சல்மாவின் தாயார் காலமாகிவிட்டார். கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் சகோதரர்களும் இறந்து விட்டார்கள்.

இதனால் சொத்தில் தந்தையின் பங்காக 36 சென்ட் நிலம் உம்மு சல்மாவுக்கு வந்தது. மேலும் அவரது பெரியப்பா வகையில் 6 சென்ட் நிலம் எழுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கூடலூர் பகுதியில் தனக்கு மொத்தம் உள்ள 42 சென்ட் நிலத்தை எல்லை வரையறை செய்வதற்காக கடந்த 17.9.2023 அன்று கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியிடம், உம்மு சல்மா விண்ணப்பித்தார். அதற்கு ரூ.820 கட்டணமும் செலுத்தி உள்ளார்.
அதன் பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் உம்மு சல்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 4-வது பிரதிவாதியாக கூடலூர் தாசில்தாரை நியமித்து உடனடியாக நில அளவீடு செய்து எல்லை வரையறை செய்யும்படி உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின்னர் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியை, நிலத்தை அளக்க வேண்டும் என்று உம்மு சல்மா அணுகி உள்ளார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் உம்மு சல்மாவிடம் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.
இதனால் அதிருப்தி அடைந்த உம்மு சல்மா, லஞ்சம் தர விரும்பவில்லை. அதேநேரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். அதன்படி ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் தாசில்தார் ராஜேஸ்வரியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து கூடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஸ்வரியை சந்திக்குமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் உம்மு சல்மா லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி தாசில்தார் ராஜேஸ்வரியிடம் இவ்வளவு பணம் தான் என்னிடம் உள்ளது எனக்கூறி கொடுத்திருக்கிறார். அதை தாசில்தார் ராஜேஸ்வரி வாங்கி கொண்டார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications