நீலகிரி மாவட்டத்தில்.. குறைகிறது தொற்று.. இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி பாக்கி.. விறுவிறு பணி
நீலகிரியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவல் குறைந்து வருகிறது.. அதேசமயம், இன்னும் இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.
2 மாதத்துக்கு முன்பு நீலகிரியில் ஓரளவு தொற்று பாதிப்பு இருந்தது.. கொங்கு மண்டல பகுதி என்பதாலும், கேரள, கர்நாடக எல்லையில் உள்ள மாவட்டம் என்பதாலும், தொற்று பரவல் ஆங்காங்கே பரவ ஆரம்பித்தது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பலனாக ஓரளவு குறைய ஆரம்பித்தது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 900-க்கு மேல் இருந்தது... ஆனால், இப்போது 750-க்கும் கீழ் உள்ளது.

பரவல்
ஆனாலும், 2-வது அலை பரவல் இன்னமும் இருப்பதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. மற்றொரு புறம் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாகி உள்ளது.. சிறிய மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மையான மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது.

பழங்குடி
பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.. இது இந்தியாவிலேயே யாரும் செய்யாத சிறப்பு ஆகும்.. இப்போது மாற்றுத்திறனாளிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாது என்பதால், அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிகள்
அதுமட்டுமல்ல, கொரோனா பாதிப்பு காரணமாக கர்ப்பிணிகள் இறக்கும் அபாயம் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. நீலகிரியில் மொத்தம் 7 லட்சத்து 21 ஆயிரத்து 949 மக்கள் தொகை உள்ள நிலையில், 18 வயதுக்கு மேல் 6 லட்சத்து 42 ஆயிரத்து 132 பேர் உள்ளனர்.

தடுப்பூசிகள்
இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதாவது மொத்த மக்கள் தொகையில் பாதி பேருக்குமேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டரை லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது... தடுப்பூசி ஒதுக்கும் அளவை பொறுத்து நீலகிரி மக்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications