உயிரோடு மண்ணில் புதைந்த சோகம்.. நீலகிரியில் கிணறு தோண்டும் போது 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கிணறு வெட்டும் பணியின் போது மண் சரிந்து மண்ணுக்குள் புகுந்த நிலையில் அவர்கள் 3 பேரது உடல்களும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்து. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா கிராமத்தில் கிணறு வெட்டும் பணி நடந்து வந்தது. இதற்கான கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் 3 வட மாநில தொழிலாளர்கள் மண்ணுக்குள் அப்படியே புதைந்து போயினர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போலீசார் மற்றும் அப்பகுதியினர் உதவியுடன் 3 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் அங்கிருந்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் உயிரிழந்த தொழிலாளர்கள் 3 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கிணறு வெட்டும் பணியின் போது மண்ணுக்குள் புதைந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications