நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சினிமாவில் வரும் சண்டை காட்சி போல.. சிவராஜை ரவுண்டு கட்டிய 6 கரடிகள்.. கடிபட்டு காயம்

6 கரடிகள் 2 பேரை தாக்க முயன்றதில் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

ஊட்டி: கிளம்பி போய்ட்டே இருக்கும்போது திடீரென்று குறுக்கே கரடி மாதிரி வந்து நின்றது. மாதிரி கிடையாது... கரடியேதான்... அதுவும் 6 கரடிகள் ரவுண்டு கட்டிவிட்டதால் உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பி வந்துள்ளனர் 2 பேர்.

நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். அதனால் இங்கு யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறையவே வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் இவைகள் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.

குன்னூர் அடுத்து அதிகரட்டி பகுதி வனவிலங்குகளுக்கு ஃபேமஸான இடம் ஆகும். அதனால் கரடி, காட்டு எருமை. சிறுத்தை போன்ற விலங்குகள் அதிக நடமாட்டத்துடன் திரியும் பகுதியாகும்.

6 கரடிகள்

6 கரடிகள்

இந்நிலையில், நேற்று சிவராஜ் என்பவர் தனது நண்பரை பைக்கில் உட்கார வைத்து கொண்டு, வேலைக்கு சென்று கொண்டிருந்தார். குன்னகொம்பை இவர்கள் வரும்போது, திடீரென 6 கரடிகள் சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தன. இதை பார்த்ததும் வண்டியை திருப்பி வந்த வழியே செல்ல முடிவு செய்தார் சிவராஜ்.

அலறி கூச்சல்

அலறி கூச்சல்

ஆனால் அதற்குள் படு ஸ்பீடான கரடிகள் வண்டியோ சேர்த்து ரவுண்டு கட்டிவிட்டன. சினிமாவில் ஹீரோவை அடியாட்கள் சுற்றுவதுபோல 6 கரடிகளும் பைக்கை சுற்ற ஆரம்பித்தன. இதற்கு நடுவில் மாட்டிக்கொண்ட சிவராஜூம் நண்பர்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் அலறி கூச்சலிட்டனர்.

பொதுமக்கள்

ஆனால் சத்தம் போட்டதும் ஆவேசம் அடைந்த கரடிகளில் ஒன்று சிவராஜ், நண்பர் மீது பாய்ந்து கடிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் தொடர்ந்து இருவரின் "காட்டு கூச்சல்" போட்டவும் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அதற்குள் கரடிகள் காட்டிற்குள் ஓடி மறைந்து விட்டன. காயமடைந்த இருவரையும் மீட்டு பொதுமக்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். இது சம்பந்தமான விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது.

English summary
Two person injured in 6 bears attacked near Ooty. They were hospitalized for treatment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X