ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. காயமா? மூச்சுதிணறலா? குழப்பும் கொடநாடு கொலையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
ஊட்டி: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.. இதையடுத்து இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கொலை நடந்தது.. கொள்ளையும் நடந்தது..
இது தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான், போலீசாரிடம் நிறைய வாக்குமூலங்களை அளித்தார்.. அந்த ரகசிய வாக்குமூலங்களை போலீசாரும் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

விசாரணை
அதேபோல, சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணனையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்... அவரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.. இந்த நிலையில், காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டதில் போலீசார் அளித்துள்ள அறிக்கைக்கும், மருத்துவ குழுவினர் அளித்துள்ள போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கும் இடையே முரண்பட்ட தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

எப்ஐஆர்
போலீசாரின் எப்ஐஆரில், ஓம்பகதூர் உடலில் 7 இடங்களில் வெட்டு காயம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.. ஆனால், மருத்துவ குழுவினர் அளித்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஓம்பகதூர் உடலில் ரத்த காயங்களே எதுவும் இல்லையாம்.. அவர் மூச்சுத்திணறியே உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, கொலை நடந்த நேரம் இரவு 12 மணி என்று ஒரு வாக்குமூலமும், 3 மணி என்று இன்னொரு வாக்குமூலமும் சொல்கிறது.

திருப்பம்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் காவலாளி எப்போது இறந்தார் என்று நேரம் குறிப்பிடப்படவில்லையாம்.. இதுபோன்ற நிறைய முரண்பட்ட தகவல்கள் இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோர் தரப்பு வக்கீல்களில் ஒருவரான வக்கீல் விஜயன் தந்த பேட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதில், "கொடநாடு வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உட்பட 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கான எண்ணை வழங்கி பட்டியலிலும் சேர்த்துள்ளது... இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனுவை ஏற்றுக் கொண்டு இவர்களை விசாரிக்க அனுமதியளித்தால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உட்பட 9 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளது" என்றார்... இது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications