அரசியலில் விஜய்.. கலர் கலராய் கொடிகளை பார்த்த காமெடியா இருக்கு! விஷால் என்ன இப்படி சொல்லிட்டாரு!
நீலகிரி: விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள். புதிதாக அரசியலுக்கு வருவோரை வாழ்த்த வேண்டும். சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது என கூறியுள்ளார் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால். அதே நேரத்தில் தமிழகத்தில் இருக்கும் கலர் கலரான அரசியல் கட்சி கொடிகளை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் விஷால் நடிக்கும் 35வது படமான மகுடம் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து குழு கலைஞர்களுக்கு மதிய உணவை பரிமாறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால்," நடிகர் விஜயகாந்த் அனைவரையும் சரி சமமாக நடத்துவதில் முன்னுதாரணமாக இருந்து வந்துள்ளார். அவருடைய வழியில் தானும் இருக்க ஆசைப்படுகிறேன்.

விஜயகாந்த்
இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறு மாதிரி இருந்திருக்கும். 22 ஆண்டுகளாக ஆக்சன் படத்தில் நடித்து வருகிறேன். நடிகர் சங்க கட்டிடடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்த் கனவு இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிந்து நனவாகும். நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும்.
ஜிஎஸ்டி வரி
சினிமாவை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்தி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை வைத்து வருகிறோம். சூதாட்டத்திற்கும் சினிமவிற்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதை குறைக்க வேண்டும். உள்ளூர் வரி குறைப்பு கேட்டு வருகிறோம். இந்த நிலையில் தரமணியில் உள்ள பிலிம் சிட்டி மோசமாக உள்ளது. இதனால் சினிமா படபிடிப்பிற்கு ஐதராபாத் செல்ல வேண்டி உள்ளது. தற்போது தமிழக அரசு 5 கோடியில் திறந்து வைத்துள்ள படபிடிப்பு தளம் வரவேற்கதக்கது.
நடிகர்கள்
இது போன்ற பயிற்சி மையம் சிறிய படங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இது போன்று சினிமா துறைக்கு மாநில அரசு மேம்பாட்டு பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற படப்பிடிப்பு தளம் புனரமைத்து திறந்து வைத்துள்ளது நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகபெரிய பயனுள்ளதாக இருக்கும்.
விஜய்
விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள். புதிதாக அரசியலுக்கு வருவோரை வாழ்த்த வேண்டும். சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது. இந்த 2026-ஆண்டு தேர்தலில் நிறைவேற்றபடாமல் உள்ள பல்வேறு திட்டங்களை வாக்குறுதியாக கொடுத்து செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் நல்லது செய்வது தான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்.
வண்ணமயக் கொடிகள்
இங்குள்ள வண்ணமயமான அரசி்யல் கொடிகளை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஆக்கபூர்வமானது ஒன்றும் தெரியவில்லை. தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது சிறப்பான பணியாகும். ஆனால் அவர்களுக்கு கையுறை கூட இல்லாமல் பணியாற்றுவதை காணும் போது வருத்தமாக உள்ளது. எனவே தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதுடன் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் சாலை பாதுகாப்பு தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications