ஊட்டி "அபிராமி".. ஏற்கனவே 3 புருஷன்கள்.. ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. கீதா செய்த காரியம் இருக்கே.. ச்சே!
கள்ளக்காதல் காரணமாக, ஒருவயது குழந்தையை கொன்றுள்ளார் பெற்ற தாய்
ஊட்டி: பெண்களை தெய்வமாக போற்றப்படும் இதே தமிழகத்தில்தான், ஈவிரக்கமற்ற "அபிராமிகள்" அடுத்தடுத்து உருவாகி கொண்டிருக்கிறார்கள்..! ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா.. 38 வயதாகிறது.. கணவர் பெயர் கார்த்திக்.. 40 வயதாகிறது.. இவர்களுக்கு நித்தீஷ், நித்தின் என்ற 3 மற்றும் ஒரு வயதில் மகன்கள் உள்ளனர்.
ஆனாலும் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், இருவரும் பிரிந்துவிட்டனர்.. அதனால், கார்த்திக் நித்தீஷூடன் கோவையிலும், கீதா தனது 2-வது குழந்தை நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும் வசித்து வந்தார்.

மயக்கம்
இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மயங்கி விழுந்தது... அதனால், குழந்தையை கீதா ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்... அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக சொன்னார்கள்.. இதுகுறித்த புகாரின்பேரில் ஊட்டி போலீசார், மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.. விசாரணையையும் நடத்தினர்.. அந்த விசாரணையில் குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது...

குழப்பம்
இதனால் குழம்பிப்போன போலீசாருக்கு சந்தேகம் கீதா மீது திரும்பியது.. அதை பற்றிய விசாரணையை ஆரம்பித்தபோதுதான், போலீசாரே அதிர்ந்து போய்விட்டனர்.. கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் கல்யாணம் ஆகிவிட்டதாம்.. அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் நடைபெறாமல் ஒன்றாகவே வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இப்போதுள்ள கார்த்திக் என்பவர் 3வது கணவர். இன்ஸ்டாகிராம் மூலம் கீதாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த நட்பு காதலாக மாறி, பிறகு திருமணம் செய்து கொண்டனர்...

கள்ள உறவு
கார்த்திக்குடனும் சண்டை போட்டுக் கொண்டு தனியாக வந்துவிட்டார்.. அடுத்து 4வதாக ஒருவர் சிக்கி உள்ளார்.. அவருடன்தான் கள்ள உறவு தொடர்ந்துள்ளது.. அந்த கள்ளதொடர்பினால்,குழந்தையை சரியாகவே பராமரிக்காமல் இருந்துள்ளார் கீதா.. அதுமட்டுமல்லாமல், மேலும்சில ஆண் நண்பர்களுடன் வெளியூருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.. இதெல்லாம் போலீசுக்கு தெரியவந்ததையடுத்து, ஒருவேளை குழந்தை கொலை செய்யப்பட்டதா, விஷம் கொடுத்து கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் அடுத்த விசாரணையை நடத்தினர்.

போஸ்ட் மார்ட்டம்
இதற்காக குழந்தை நித்தின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர்.. அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் நேற்றுதான் வந்தது.. அதில், விஷம் வைத்து கொல்லப்படவில்லை என்று தெரியவந்தது.. மேலும், குழந்தை தொட்டிலில் தூங்குவதற்காக ஆட்டிய போது, வேண்டுமென்றே சுவற்றில் குழந்தையின் தலையை அடித்து உள்ளார் கீதா. தன்னுடைய கள்ளத்தொடர்புக்கு இடையூறாக குழந்தை இருந்ததால், அடிக்கடி வெளியே சென்று வர முடியவில்லையாம்.. தாய்ப்பால் அடிக்கடி கொடுக்க வேண்டி இருந்ததாம்..

கீதா - அபிராமிகள்
இது கீதாவுக்கு எரிச்சலை தந்துள்ளது.. அதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. சம்பவத்தன்று, குழந்தைக்கு உணவு அளவுக்கு அதிகமாக வாயில் ஊட்டி விட்டதுடன், மதுபானமும் குழந்தைக்கு கொடுத்து உள்ளார்... இதனால் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.

கள்ள உறவு
இதற்கு பிறகுதான் போலீசார் கீதா மீது வழக்கு பதிவு செய்தனர்.. குழந்தையை கொலை செய்த பெற்ற தாய் கீதா, இப்போது கோவை ஜெயிலில் உள்ளார்.. கள்ளக்காதல் தவறல்ல என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டதை பற்றி கவலைப்பட யாருமில்லை என்றாலும், பச்சிளம் பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியாவது நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications