Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புலி சாதம்".. பார்சலை பிரித்தால்.. உள்ளே பூனைக்கறி.. அங்கே புலிக்கறி.. என்ன நடக்குது தமிழ்நாட்டில்?

புலியை அடித்து கொன்று சமைத்து சாப்பிட்ட 4 வடமாநில நபர்களை நீலகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: சத்தியமங்கலத்தில் 4 வெளிமாநிலத்தவர் கைதாகி உள்ளனர்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. என்ன நடந்தது?

4 நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்து அதிர்ச்சியை கிளப்பியது.. அங்கு ஆக்கப்பள்ளி என்ற கிராமம் உள்ளது..

காட்டுப் பகுதியை ஒட்டி இந்த கிராமம் உள்ளது. அதனால், அடிக்கடி யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற விலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்துவிடும்..

 கரண்ட்வேலி

கரண்ட்வேலி

விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களையும் நாசமாக்கிவிட்டு செல்கிறது.. இதனால், வாழ்வாதாரத்தை இழந்த அந்த கிராம மக்கள், வனவிலங்குகளில் இருந்து பயிர்களை காப்பாற்ற, சட்டத்துக்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்துள்ளனர். இந்த மின்வேலிகளில் சிக்கி இதுவரை எத்தனையோ வனவிலங்குகள் இறந்துள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, வனத்துறையினர் அந்த கிராமத்தில் உள்ள மின் வேலிகளை அகற்றினாலும், கிராம மக்கள் அதை மதிப்பதில்லையாம்., சாதாரண வேலியை போட்டாலும் விலங்குகள் அவைகளை உடைத்து கொண்டு உள்ளே புகுந்துவிடுவதாக சொல்லி, கரண்ட் வேலிகளை வைத்திருக்கிறார்கள்.

 புலிக்கறி

புலிக்கறி

அப்படித்தான், சில நாட்களுக்கு முன் ஒரு புலி அந்த பக்கமாக வந்துள்ளது.. கரண்ட் வேலி இருப்பது தெரியாமல், அதை கடக்க முயன்றுள்ளது.. ஆனால், ஷாக் அடித்து அங்கேயே இறந்துவிட்டது. இதை பார்த்த கிராமத்தினர் சிலர் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல், இறந்த புலியை அப்படியே காட்டுக்குள் கொண்டுவந்து வைத்து, வெட்டி சமைத்துள்ளனர்.. அதற்கு பிறகு, ஊருக்குள் கொண்டுவந்து, கிராம மக்கள் எல்லாருக்குமே புலிக்கறியை தந்துள்ளனர்.. இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிந்ததுமே, அதிர்ச்சியடைந்து விசாரிப்பதற்காக கிராமத்துக்குள் வந்தனர்.

 புலிசாதம்

புலிசாதம்

ஆனால், கிராம மக்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். எனினும் போலீசார் புலியை சமைத்த 12 பேரை கைது செய்தனர். புலியை அடித்து சமைத்து சாப்பிட்ட விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை கிளப்பியது என்றால், நம்ம ஊரிலும் இதே போல நடந்துள்ளது.. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது அரசூர் பகுதி.. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தந்துள்ளனர்.. உடனே விரைந்து சென்ற வனத்துறையினர், அவர்களின் கூடாரங்களை சோதனை செய்தனர்..

 எலும்பு புலி

எலும்பு புலி

அப்போது ஒரு பையில் புலித்தோல், புலி நகம், எலும்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.. இது தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த ரத்னா 40, மங்கல் 28, கிருஷ்ணன் 59, ராஜஸ்தானை சேர்ந்த ராம் சந்தர் 50, ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையும் ஆரம்பமானது.. இவர்கள் நீலகிரி மாவட்டம் எடக்காடு பக்கத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு வந்து வேட்டையாடி இருக்கிறார்கள்.. அதிலும் சுருக்குவைத்து புலியை வேட்டையாடி, அதை கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளார்கள்.. மிச்சம் மீதி புலியின் நகங்கள், எலும்புகளை மட்டுமே கடத்தி கொண்டுவந்து பையில் வைத்திருந்தது தெரியவந்தது.

 பூனைக்கறி

பூனைக்கறி

இப்போது கைதானவர்களிடம் நீலகிரி மாவட்ட வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இப்படியான காரியத்தை செய்ய முடியுமா? உள்ளூர் மக்களும் உதவி செய்திருப்பார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.. ஏற்கனவே சென்னையில் பூனைக்கறி வியாபாரம் நடக்கிறதாம்.. மட்டன்கறியுடன் சேர்த்து பூனைக்கறியை ஓட்டலில் மிக்ஸ் செய்து விற்பதாக நேற்றில் இருந்து செய்திகள் பீதியை கிளப்பி கொண்டிருக்கின்றன.

 புலி + பூனைக்கறி

புலி + பூனைக்கறி

பூனைகளை கொன்று, தோலை உரித்து, ஆட்டுக்கறியுடன் கலந்து விற்றுவிடுவார்களாம்... பிராட்வே, அயனாவரம், சவுகார்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு, சாலையோர வியாபாரிகளுக்கு பூனை இறைச்சியை விற்றுள்ளனர்.. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் பூனைக்கறி, இன்னொரு பக்கம் புலிக்கறி என பீதியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்..!!

பூனை இறைச்சி

பூனை இறைச்சி

இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சென்னை பல்லாவரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் அதிகமாக பூனை இறைச்சி விற்கப்பட்டுள்ளதாம்.. நரிக்குறவர்களிடமிருந்து வாங்கும் எலும்பில்லா பூனைக்கறியை, மட்டனுடன் மிக்ஸ் செய்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி போன்றவைகளை தயாரித்துள்ளனர்.. நடைபாதை கடைகளுக்கு பூனைகளை விற்ற 2 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.. இரவு நேரங்களில் அப்பார்ட்மென்ட்களின் அருகில் சுற்றித்திரியும் பூனைகள் பிடிக்கப்பட்டு பார்ப்பதற்கு அழகாக உள்ள பூனைகள் வசதி படைத்தவர்களிடம் விற்கப்படுகிறதாம்..

எலும்பில்லா பூனை

எலும்பில்லா பூனை

அனைத்து ஓட்டல்களிலும் இப்படி நடப்பதில்லை என்றாலும், சில நடைபாதை ஓட்டல்களில் இப்படி நடப்பது தெரியவந்துள்ளது.. எனவே, நரிக்குறவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.. இந்த பூனைக்கறி பீதி கிளம்பி உள்ளதால், அனைத்து ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், முக்கியமாக, சாலையோர உணவகங்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு, இறைச்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக எழுந்துளளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+