கைலாசாவில் கலகமா.. ரஞ்சிதாவால் பிரச்சினையாம்.. சிஷ்யைகளை சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் நித்தி
சென்னை: எங்கு இருக்கிறது என்றே தெரியாத கைலாசா நாட்டில் ரஞ்சிதா பிரதமர் ஆகியிருப்பதாக நித்தியானந்தா கூறிய நிலையில், தற்போது ரஞ்சிதாவுக்கு கொடுத்த பிரதமர் பதவியால் கைலாஷாவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீதும் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி தப்பி ஓடினார். தற்போது, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ள நித்யானந்தா அந்த நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகாரம் கொடுத்ததாக கைலாசாவின் இணைய பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

அதுபோக கைலாசா நாட்டின் பெருமைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு நித்தியானந்தா ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. கைலாசாவில் இருந்து வீடியோ, ஆடியோ, போட்டோக்கள் உட்பட சுடசுட செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. லைவ் டெலிகாஸ்ட்களும் நடக்கின்றன.. இந்த கைலாசா என்பது மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளதாக சொல்கிறார்கள்..
நடிகை ரஞ்சிதா பிரதமரா?: ஆனால் கைலாசா எங்கே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.. இத்தனைக்கும் அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த நித்தியானந்தா, வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாகவும் கூறி வருகிறார். அத்துடன், அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற போட்டோக்கள்கூட சோஷியல் மீடியாவில் வெளியாகியிருந்தன.
இப்படி சர்ச்சை மேல் சர்ச்சை என ஹிட் அடித்து கொண்டிருக்கும் கைலாசாவில் நடிகை ரஞ்சிதா, நாட்டுக்கு பிரதமராக போகிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு இணையத்தில் தகவல் பரவியது. நித்தியானந்தாவே இரண்டு மாதங்களுக்கு முன் இப்படி ஒரு தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ரஞ்சிதாவும் வீடியோக்களில் தோன்றி உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
தடுமாறும் நித்தியானந்தா: நித்தியானந்தாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் ரஞ்சிதாவின் செயல்பாடுகள் இருந்தன. இந்த நிலையில், ரஞ்சிதா பிரதமர் ஆனதால் நித்தியானந்தா சீடர்களுக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கொடி கட்டி பறக்கின்றன. பணிவிடை செய்து வந்த ரஞ்சிதா, பிரதமரானதற்கு சீடர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி நித்தியானந்தாவிடம் உள்ள அதிகாரம் , ரஞ்சிதாவிடம் செல்வதை சீடர்கள் விரும்பவில்லையாம். இதனால், சீடர்கள் இடையே இரு பிரிவுகாக பிளவு ஏற்பட்டுள்ளதாம். சீடர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிளவால் சிஷ்யைகளை சரிகட்ட முடியாமல் நித்தியானந்தா தடுமாறி வருகிறாராம். இது என்னடா புது தலைவலி என நித்தியானந்தா தற்போது தலையை பிய்த்துக்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications