Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 டோஸ் தடுப்பூசி, இந்திய மரபணு கூட்டமைப்பு

Subscribe to Oneindia Tamil

இந்திய SARS-COV-2 மரபணு கூட்டமைப்பு (INSACOG), இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர்கள் அல்லது மூன்றாவது டோஸ்கள் போடுவதை "கருத்தில் கொள்ளப்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.

5 மடங்கு பரவல் வேகம் கொண்ட ஓமிக்ரான்

5 மடங்கு பரவல் வேகம் கொண்ட ஓமிக்ரான்

கோவிட்-19 உலகையே அச்சுறுத்திய நிலையில் புதிய வரவாக 30 மடங்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த வாரம் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கடந்த மாதம் 24 ம் தேதி கரோனா வைரஸின் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் டெல்டா வைரஸைவிட பரவலில் வீரியம் மிகுந்தது, 5 மடங்கு வேகத்துடன் பரவக்கூடியது.

தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாது, அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்தனர். ஓமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களிலேயே அதும் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டது. எண்ணிக்கை சிறிய அளவில் இருந்தாலும் டெல்டா வைரஸும் இவ்வாறுதான் குறைந்த அளவிலான எண்ணிக்கை இருந்தபோது கண்டறியப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்பை உண்டுப்பண்ணியது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்களில் கட்டுப்பாடு

விமான நிலையங்களில் கட்டுப்பாடு

ஓமிக்ரான் பரவலைத்தடுக்க ஓமிக்ரான் பாதிப்பு உள்ள தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனாலும் அதையும் மீறி பெங்களூருவில் 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவர் மருத்துவர். அவர் வெளிநாடு எதுவும் போகாத நிலையில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னொருவர் 62 வயது முதியவர் அவருக்கு தொற்று நெகட்டிவ் என வந்து அவர் தென் ஆப்ரிக்கா சென்ற நிலையில் அவருக்கு ஓமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

இந்த இருவரோடும் தொடர்பில் இருந்தவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவி்த்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு ஆய்வகங்கள் ஆகியவை இணைந்து 40 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என அறிவுறுத்தியுள்ளன.

கட்டாயம் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 வது டோஸ் தடுப்பூசி வேண்டும்

கட்டாயம் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 வது டோஸ் தடுப்பூசி வேண்டும்

தடுப்பூசி பற்றிய முடிவுகள் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் (NTAGI) ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன, மேலும் INSACOG என்பது மரபணு வரிசைப்படுத்துதலில் நிபுணத்துவம் பெற்ற 10 ஆய்வகங்களின் அமைப்பாகும், இது ஒரு ஆலோசனைக் குழு அல்ல. என்றபோதிலும் சூழலைக் கருத்தில் கொண்டு இரு அரசு அமைப்புகளும் தாமாக முன்வந்து இந்தக் கருத்தை இம்முறை தெரிவித்துள்ளன.

இந்தியாவில் உள்ள தடுப்பூசி செலுத்தாத மக்கள் அனைவருமே பெரும் இடர்பாடுகளைச் சந்திக்கக் கூடியவர்கள். இவர்களைக் கருத்தில் கொள்ளும் அதேநேரத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசிக்கலாம். முதலில் அதிகமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ள பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உடலில் குறைந்த அளவு நோய் எதிர்ப்புச்சக்தி இருப்பவர்களுக்கு ஓமிக்ரானால் பாதிப்பு அதிகம். அதேநேரம் தடுப்பூசி செலுத்தியவர்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை முழுமையாக ஒமிக்ரான் அழித்துவிடும் என்பதற்கு சான்று இல்லை. தடுப்பூசி செலுத்தியிருந்தால் நோய் தீவிரத்தன்மை குறையும்.

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செயல்திறன்

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செயல்திறன்

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கிளினிக்கல் பரிசோதனையில் கிடைத்த முடிவுகளைவிட, தடுப்பூசி செலுத்தியபின் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி காலப்போக்கில் குறைந்துவிடுகிறது, என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆய்வில், கோவிஷீல்டின் இரண்டு டோஸ்கள் அறிகுறியான கோவிட்-19 தொற்றுக்கு எதிராக 63% பாதுகாப்பையும், மிதமான அல்லது கடுமையான நோய்களுக்கு எதிராக 85% பாதுகாப்பையும் அளித்ததாக தெரிவிக்கிறது. கோவாக்சினுக்கான இதேபோன்ற ஆய்வு இன்னும் கிடைக்கவில்லை.

 தென்னாப்ரிக்க ஆய்வு முடிவுகளுக்குப்பின் முடிவு

தென்னாப்ரிக்க ஆய்வு முடிவுகளுக்குப்பின் முடிவு

சிஎஸ்ஐஆர் மற்றும் ஐஜிஐபி அமைப்பின் இயக்குநர் அனுராக் அக்ரவால் மாறுபட்ட கருத்தை வைத்துள்ளார், அவரது கருத்து " உலக சுகதாார அமைப்பின் பரிந்துரையின்படி முதலில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் குறித்த ஆதாரங்கள் இன்னும் சில வாரங்களில், ஓமிக்ரானுக்கும் நோய் தீவிரத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய சிறந்த தகவல்களை தென்னாப்பிரிக்காவிலிருந்து பெறுவோம் அது கிடைத்தபின் பரிசீலிக்கலாம்.

இந்திய சார்ஸ்கோவிட் மரபணு கூட்டமைப்பு ஆலோசனை கூறும் அமைப்பல்ல. ஆனால், ஒமிக்ரான் தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியிலிருந்து தப்பிக்கும் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆதலால் பூஸ்டர் தடுப்பூசியு்ம் தேவைப்படலாம். ஒமிக்ரான் தீவிரம் குறித்து அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்கள் விவரம்

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்கள் விவரம்

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அனைத்து வயதானவர்களுக்கும் பூஸ்டர் டோஸ்களை அனுமதித்துள்ளன, அவர்களின் இரண்டாவது டோஸ் முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு. Pfizer/BioNTech தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்குப் பிறகு ஆறு மாதங்களில் தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்று இஸ்ரேலில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு டோஸ்கள் மட்டுமே எடுத்தவர்களுடன் ஒப்பிடும்போது, ​​மூன்று டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு COVID-19 தொடர்பான மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து 93% குறைவாக உள்ளது. கடுமையான நோய்க்கான ஆபத்து 92% மற்றும் COVID-19-க்கான ஆபத்து 81% குறைவு. கோவிட் தொடர்புடைய மரணம். தடுப்பூசி செயல்திறன் பாலினம் மற்றும் வயது பிரிவுகள் (வயது 40-69 மற்றும் 70+) மற்றும் இணை நோய்களின் எண்ணிக்கையில் சீரானதாக உள்ளதாக கண்டறியப்பட்டது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    125 கோடி முதல் டோஸ் தடுப்பூசி

    125 கோடி முதல் டோஸ் தடுப்பூசி

    இந்தியா இதுவரை 125 கோடி டோஸ்களை வழங்கியுள்ளது, இதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு முதல் டோஸ் ஆகும். இந்தியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். சுமார் 60% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்றுள்ளனர். அக்டோபர் 9-15 வாரத்தில் இருந்து, இரண்டாவது டோஸ்களின் செலுத்தும் எண்ணிக்கை முதல் டோஸை விட அதிகமாக உள்ளது, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் 94 கோடி தடுப்பூசி போடுவதற்கான அதன் இலக்கை எட்ட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+