பற்றி எரிந்த 3வது மாடி.. 3 வயது தம்பியைக் கீழே தூக்கிப் போட்டு விட்டு தானும் குதித்த 10 வயது அண்ணன்!
பிரான்ஸ் நாட்டில் தீ விபத்தில் சிக்கிய 3வது மாடியில் இருந்து குதித்த இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க, மூன்றாவது மாடியில் இருந்து குதித்த இரண்டு சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவத்தன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரெனோபிள் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அந்த ஒரு வீட்டில் பத்து வயது சிறுவனும், மூன்று வயது நிரம்பிய அவனது தம்பியும் இருந்தனர்.
வீடு தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ந்து போன அந்த சிறுவர்கள் அலறத் தொடங்கினர். வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வெளியில் செல்ல முடியாமல் இருவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். சிறுவர்கள் இருவரும் ஜன்னல் வழியாக சத்தம் போட்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கோரினர்.

சிறுவர்கள்
அப்போது அந்த பக்கம் சென்றவர்கள் சிறுவர்கள் அலறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் கீழே குதித்து விடுமாறு கூறினார். இதையடுத்து அந்த பத்து வயது சிறுவன் மூன்று வயதான தம்பியை முதலில் கீழே தூக்கிப் போட்டான். அந்த குழந்தையை கீழே இருந்தவர்கள் பிடித்துவிட்டனர்.

தப்பித்த சிறுவர்கள்
பின்னர் மேலே இருந்த சிறுவனும் கீழே குதித்தான். அவனை பிடிக்கும் போது ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நல்லவேளையாக அந்த சிறுவர்கள் இருவருக்கு எதுவும் ஆகவில்லை. தீப்பிடித்த வீட்டில் புகையில் சிக்கியதால் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை
தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டில் எரிந்துகொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். 3வது மாடியில் உள்ள வீட்டில் தீப்பிடித்தது எப்படி? அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

துணிச்சலுக்கு பாராட்டு
ஆனால் தீப்பிடித்த வீட்டில் இருந்து எப்படியும் தப்பித்தே ஆக வேண்டும் என போராடி, துணிச்சலாக மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த அந்த சிறுவர்களின் துணிச்சலையும், அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் சரியாக கீழே இருந்து பிடித்தவர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications